Bye Bye Stalin! அரங்கம் அதிர முழங்கிய எடப்பாடி பழனிசாமி! தொண்டை என்னத்துக்கு ஆகுறதுனு கேட்ட மோடி
செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் நடந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிவிட்டு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுத்து பாராட்டிய பிரதமர் மோடி (PM Modi), தொண்டையை காட்டி, "இப்படி பேசினால் தொண்டை என்னத்துக்கு ஆகுறது" என கேட்டார்.
மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அது போல் கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன், அன்புமணி பேசியதும் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மதுராந்தகம் பூமியே குலுங்கும் அளவுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதுவே வரும் சட்டசபை தேர்தலில் நம் அணி வெற்றிக்கு சான்று.
முதல் முதலில்
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதல் முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி வருகை தந்திருக்கிறார். மோடி கால் வைத்ததும் சூரியன் மறைந்துவிட்டது. நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் உரிய காலத்தில் உரியவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இந்த தருணம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது.
நான்கே முக்கால் ஆண்டுகள்
திமுக ஆட்சிக்கு வந்து நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலத்தில் மக்களுக்கு இந்த ஆட்சி கொடுத்தது வேதனையைத்தான். எல்லா துறைகளிலும் ஊழல், ஊழல் இல்லாத துறைகளே கிடையாது. மக்களை வாட்டி வதைக்கிற அரசாங்கம் தேவையா?
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார், இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்த சாதனை ஒன்றுதான் அது ஊழல்! ஸ்டாலின் குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
உதயநிதிக்காக
தனக்கு பிறகு ஆட்சி பொறுப்பில் மகன் உதயநிதி வரவேண்டும் என நினைக்கிறார். திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் வீதியில் இருக்கிறார்கள். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத்தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இடம் இருக்கிறது.
எந்தத் தகுதியும் இல்லாத உதயநிதியை, எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என முதல்வராக்கியுள்ளார். இந்தத் தேர்தல் திமுகவின் இறுதி தேர்தல். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். பிரதமர் நமக்கு துணை நிற்கின்றார். தேர்தல் போரில் எதிரிகளை ஓடஓட விரட்டி வெற்றிபெறுவோம். நம் வெற்றிக்கு மக்கள் துணை நிற்கின்றார்கள். நமது கூட்டணி 210 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.
பிரதமர் மோடி
அதிமுக ஆட்சியில்தான் மத்தியில் கேட்ட நிதியை கொடுத்து, திட்டங்களை கொடுத்தார்கள். அதிகமான பாலத்தையும், தேசிய நெடுஞ்சாலைகளையும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் அனுமதி கொடுத்து, ரூ. 63,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அமைச்சர்கள் வந்து அடிக்கல் நாட்டினர். நடந்தாய் வாழி காவிரி திட்டம் எல்லாம் கொடுத்தது மத்திய அரசு. அதிமுக ஆட்சி மத்தியில் இணக்கமாக இருந்ததால் பல திட்டங்கள் கிடைத்தது. மாநிலம் வளர்ச்சி பெற்றது.
பிரதமர் மோடிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி உரக்க பேசினார்.
தொண்டையை காட்டிய மோடி
அப்போது தனது இருப்பிடத்திற்கு சென்ற போது பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமிக்கு கை குலுக்கினார். மேலும் தனது தொண்டையை காண்பித்தார் ஏதோ கேள்வி எழுப்பினார். அனேகமாக இப்படி உரக்க கத்தி பேசினால் தொண்டை என்னத்துக்கு ஆகுறது என கேட்டிருப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications