திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும்... ராமதாஸ் புதிய கோரிக்கை
சென்னை: சேலம் -சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகி அது கிடப்பில் உள்ள நிலையில், திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸின் கோரிக்கைக்கு ஒரு புறம் வரவேற்பு இருந்தாலும், திண்டிவனம்-திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சியோடு தான் இந்த விவகாரத்தை பார்க்கின்றனர்.

அதிவேக சாலை
தமிழகத்தில் சாலைவழி பயண நேரத்தை குறைக்கும் வகையில், முதற்கட்டமாக சேலம் சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது விளைநிலங்கள் வழியே அமைக்கப்பட இருந்ததால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் இப்போது தொங்கலில் உள்ளது.

திருச்சி-திண்டிவனம்
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், திருச்சி-திண்டிவனம் இடைடே 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திண்டிவனம்- திருச்சி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இணைப்பு பாதை
சென்னை -திருச்சி சாலை என்பது வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதை என தெரிவித்துள்ளார் ராமதாஸ். எனவே, திண்டிவனம் திருச்சி சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது என்றாலும் கூட, திண்டிவனம் -திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை திருச்சி வரை 8 வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டால் தங்கள் நிலம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் இப்போதே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications