தேர்தல் வந்தா திராவிட மாடல் தெரியாதா? ஆரத்திக்கு கும்பிடு போடுறீங்களே? - எம்.பிக்கு அன்புமணி கேள்வி!
சென்னை : தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கும்போது மட்டும் முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? என திமுக எம்.பிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில், இந்து மதம் சார்ந்த பூஜை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிட மாடலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என திமுக எம்.பி செந்தில் குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

திமுக எம்.பி செந்தில்குமார்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து இந்து மதம் சார்ந்த பூஜை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் செந்தில் குமார் எம்.பி. அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது என கோபமாகப் பேசினார்.

கருத்தால் சர்ச்சை
இந்து மதம் சார்ந்த பூஜை மட்டும் நடத்துகிறீர்கள்.. சர்ச் ஃபாதரையும் கூப்பிடுங்கள், மசூதி இமாமை கூப்பிடுங்கள் என திமுக எம்.பி செந்தில் குமார் பேசினார். இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது. தருமபுரி எம்.பி செந்தில்குமாரின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பும், சிலர் வரவேற்பும் தெரிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமாரின் செயலை விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். தருமபுரி எம்.பி வீடியோ வந்திருக்கிறது, ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பூஜை நிகழ்ச்சி செய்கிறார்கள். அது மிகவும் சாதாரணமானதுதான். எல்லோரும் செய்வதுதான்.

அவரவர் நம்பிக்கை
இந்த பூஜைகள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அங்கு வந்த எம்.பி, இது திராவிட மாடல் ஆட்சி இதுபோன்ற பூஜைகள் செய்யக்கூடாது எனக் கூறுகிறார். திராவிட மாடலுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கிறது? அங்கு இருப்பவர்கள் நம்பிக்கை இருக்கிறது, அதனால் அவர்கள் செய்கிறார்கள். இது காலம் காலமாக நடப்பது தான்.

ஆரத்தி எடுக்கும்போது
தேர்தல் நேரத்தில் மட்டும் ஆரத்தி எடுக்கும்போது முட்டிக்கொண்டு போய் கும்பிடு போடுகிறீர்களே.. அப்போது திராவிட மாடல் இல்லையா? இதில் என்ன இருக்கிறது? இது அவரவர் நம்பிக்கை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வீணாக எல்லா விவகாரங்களிலும் தலையிடக்கூடாது" எனப் பேசியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications