முகம் முழுக்க பூரிப்பு: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த அன்புமணி: மகள் திருமண வரவேற்பிற்கு அழைப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தார்.
Recommended Video
பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் தம்பதியரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கும் சங்கமித்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தாலும் கொரோனா காலம் என்பதால் நெருக்கமான உறவினர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சந்திப்பு
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடக்க உள்ளது. இந்த வரவேற்பு விழாவிற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை அன்புமணி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பு
அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி இந்த சந்திப்பில் உடன் இருந்தார். முகம் முழுக்க சிரிப்போடும், பூரிப்போடும் முதல்வர் ஸ்டாலின் இருவரையும் வரவேற்றார். திருமணம் குறித்தும், மாப்பிள்ளை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அன்புமணியிடம் விசாரித்தார். அதோடு ராமதாஸின் உடல்நிலை குறித்தும் ஸ்டாலின் விமர்சித்தார். இதில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை, அரசியல் கடந்த சந்திப்பு இது என்று கூறப்படுகிறது.

பாமக பாராட்டு
சமீப காலமாக திமுக அரசின் முக்கியமான அறிவிப்புகளை பாமக பாராட்டி வருகிறது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பாமக நன்றி தெரிவித்து அவரை வரவேற்று இருந்தது. அதோடு நீங்கள் தமிழ்நாட்டின் பெருமை முதல்வரே என்று பாமக தலைவர் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி இருந்தார். அதோடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு அறிவிப்பிற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி வரவேற்பு தெரிவித்து இருந்தார்.

அறிவிப்பு
சமீப நாட்களாகவே சட்டசபையில் பாமக திமுகவின் பல்வேறு அறிவிப்புகளை வெளிப்படையாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்து, பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!, என்று ராமதாஸ் வாழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications