சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முதல்வர்" அன்புமணி என்றாரே டாக்டர் ராமதாஸ்.. இவர் 'அந்த' பக்கமே போகலையாமே.. உண்மையா?

அன்புமணி ராமதாஸ் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி அன்புமணி ராமதாஸ், டெல்லியில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காமல் முதல்நாளே, ஆப்சென்ட் ஆனதாக கூறப்படுகிறது.

வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.

இதன்காரணமாக, அக்கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் கடந்த வாரம் திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மெரினா குலுங்கனும்; டெல்லி பார்க்கனும்; அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் புதிய அஸ்திரம்!மெரினா குலுங்கனும்; டெல்லி பார்க்கனும்; அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் புதிய அஸ்திரம்!

 அன்புமணி

அன்புமணி

அந்த கூட்டங்களில் எல்லாம், முக்கிய வேண்டுகோள்களையும், குறிக்கோள்களையும் டாக்டர் ராமதாஸ் விடுத்து வருகிறார்.. குறிப்பாக, "42 வருடங்கள் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன்... உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்... வயதானவர்கள் பேசத்தான் முடியும்.. இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது.. அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் தான் உள்ளது... ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகளை பெற வேண்டும்...

அன்புமணி

அன்புமணி

நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம்.. இனி தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு திண்ணை திண்ணையாக பிரச்சாரம் செய்ய வேண்டும்... 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி முதல்வராகி ஆள முடியும்... அன்புமணி மாதிரி ஒரு திறமைசாலி யாரும் கிடையாது... விரைவில் கோட்டையில் பாமக கொடி பறக்கும்' என்று பேசியிருந்தார்.

 பாமக

பாமக

இந்நிலையில், திடீரென ஒரு செய்தி இன்றைய தினம் கசிந்து வருகிறது.. இந்த முறையும் டெல்லி கூட்டத்தொடரில் எம்பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவில்லையாம்.. குளிர்கால கூட்டத்தொடரின் முதல் 2 நாளில் தமிழக எம்பிக்களில் அன்புமணி ராமதாஸ் மட்டும் ஆப்சென்ட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது..

ஆப்சென்ட்

ஆப்சென்ட்

கடந்த நவம்பர் 29ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க போகிறது.. இதில், முதல் நாளே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா 2 அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் எம்பிக்கள் மொத்தம் 18 பேர்.. இதில், அத்தனை பேரும் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், பாமக மாநிலங்களவை அன்புமணி ராமதாஸ் மட்டும் வரவில்லை... தமிழக எம்பிக்கள் முதல்நாளே பல கேள்விகளை அவையில் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.. ஆனால், அன்புமணி மட்டும் ஆப்சென்ட் ஆகி உள்ளார்..

 உண்மையா?

உண்மையா?

இதுகுறித்து ஒரு யூடியூப் சேனல் செய்தி போடவும், அதை வைத்து சில கேள்விகளும் இணையவாசிகள் முன்வைத்து வருகின்றனர். அன்புமணிதான் இனி பாமகவின் எதிர்காலம் என்று நம்பி கொண்டு ராமதாஸ் ஒவ்வொன்றையும் முன்னெடுத்து வரும்போது, இப்படி ஆப்சென்ட் ஆவது சரியா என்று கேட்கிறார்கள்... அதுமட்டுமல்ல தொகுதி மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்காக, நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பினால், இப்படி ஆப்சென்ட் ஆவது சரியா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அட்டவணை

அட்டவணை

இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே அன்புமணி இப்படித்தான் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்.. அது தொடர்பான அட்டவணைகளும் செய்திகளும் வெளியாகி இருந்தன.. நடந்து முடிந்த முதல் குளிர்கால கூட்டத்தொடரில் 20 அமர்வுகளில் 5ல் மட்டுமே அன்புமணி கலந்து கொண்டார்.. அதேபோல, 2020 ஜனவரியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 23 அமர்வுகளில் 2ல் மட்டுமே பங்கேற்றார். ஜூலை மாதம் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 17 அமர்வுகளில் 5ல் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

சலசலப்பு

சலசலப்பு

கடந்த செப்டம்பரில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 10 அமர்வுகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளவில்லை.... அப்போது லீவில் இருந்ததாக சொல்லப்பட்டது. இப்போதும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.. ஆனால், இது சம்பந்தமான விவாதங்களும், சலசலப்புகளும் மட்டும் கிளம்பி உள்ளது.

English summary
PMK Rajyasabha MP Anbumani Ramadoss absent two days in parliament session, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X