ஆணி அடித்தார் போல் அமரும் அன்புமணி.. ’அப்பா’ ராமதாஸால் ஒன்னுமே பண்ண முடியாது! அவரே போட்ட ’விதி’

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், செயற்குழுவில் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் உலவுகின்றன. இந்நிலையில், பாமகவின் சட்டவிதி 15-இன் படி, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் மட்டுமே சட்டப்படி செல்லும் என்கின்றனர் பாமகவினர்.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, பாஜக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கி விட்டு நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் உட்கட்சி பூசலில் சிக்கி தவித்ததால் அதிருப்தி அடைந்தனர் நிர்வாகிகள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். அதிலிருந்து தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

Ramadoss Anbumani Ramadoss PMK

மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா உள்ளிடோரை நீக்குவதாக அறிவித்ததோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களையும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உச்சகட்டமாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜிகே மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட சிலரை தவிர குறிப்பாக தன்னைத் தவிர பெரும்பாலானோரை ராமதாஸ் மாற்றி இருக்கிறார். பொது செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், வன்னியர் சங்கத்தில் 15க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பாமகவில், மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில துணைத்தலைவர், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாநில தலைவர், தேர்தல் பணி செயலாளர், தேர்தல் பணி தலைவர், மாநில இளைஞர் சங்க செயலாளர், மாணவர் சங்கச் செயலாளர், பாட்டாளி சமூக ஊடக பேரவை தலைவர், 78 மாவட்ட செயலாளர்கள், 63 மாவட்ட தலைவர்கள், ஒரு மாவட்ட பொருளாளர் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை பற்ற வைத்தது.

வழக்கமாக ராமராஸ் வெளியிடும் அறிக்கைகளில் 'பசுமை நாயகர் செயல் தலைவர் அன்புமணி' என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அன்புமணியின் பெயர் இடம் பெறவில்லை. இது பாமக நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், பாமகவின் சட்டவிதி 15-இன் படி, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் மட்டுமே சட்டப்படி செல்லும் என்கின்றனர் பாமகவினர்.

Ramadoss Anbumani Ramadoss PMK

இதுதொடர்பாக அவர்களிடம் பேசிய போது," அன்புமணி இராமதாஸை நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், செயற்குழுவில் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் உலவுகின்றன. அவை அனைத்தும் நமுத்துப்போன பட்டாசுகள் தான்! அவை ஒருபோதும் வெடிக்காது. பாமகவின் சட்டவிதி 15-இன் படி, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் மட்டுமே சட்டப்படி செல்லும்.

அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்காத கட்சி அமைப்புக் கூட்டங்கள் அனைத்தும் செல்லாதவையே ஆகும். இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள் தான் செல்லும். ஆலமரத்தடி கட்டைப் பஞ்சாயத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாது. அவை சட்டவிரோதம். அதுபோல, அன்புமணி இராமதாஸ் பங்கேற்காத பாமக அமைப்புக் கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவையே ஆகும்." என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+