வேலையைக் காட்டிய ரயில்வே.. மாமல்லபுரம் மலைக்குது..கடலூர் தவிக்குது! மத்திய அரசுக்கு பறந்த கண்டனம்!
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டம், அத்திப்பட்டு - புத்தூர் புதிய தொடர்வண்டிப் பாதை ஆகிய 3 திட்டங்களையும் கிடப்பில் போட்டிருப்பதாக தெற்கு தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது. மதுரை - தூத்துக்குடி, ஈரோடு- பழனி இடையிலான புதிய பாதைத் திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தெற்கு தொடர்வண்டித்துறையில் இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்தத் தகவல்களை தெற்குத் தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, போதிய நிதி ஒதுக்கப்படாதது, தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தித் தரப்படாதது, தொடர்வண்டித்துறையின் தவறான வருவாய்க் கணக்கீடுகள் ஆகியவை தான் காரணமாகக் கூறப்படுகின்றன.

அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக பதவி வகித்த போது, 2008-ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டிருந்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சி
ஆனால், உரிய நிதி ஒதுக்கீடு, மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் 17 ஆண்டுகளாக இது கனவுத் திட்டமாகவே தொடர்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதும், கிடப்பில் போடப்படுவடும் இது மூன்றாவது முறையாகும். 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் இத்திட்டம் ரத்து செய்யப்பட போது, பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் இத்திட்டம் காப்பாற்றப்பட்டது. போராடி மீட்கப்பட்ட இந்தத் திட்டத்தை தெற்கு தொடர்வண்டித்துறை கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.
திண்டிவனம் திருவண்ணாமலை
அதேபோல், பா.ம.க.வால் அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு இன்னும் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்படவில்லை; அத்திப்பட்டு &- புத்தூர் புதிய பாதை திட்டத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, திண்டிவனம் - & திருவண்ணாமலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தை கைவிடுவது முறையல்ல.
ரயில் திட்டம்
தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் கைவிடப்படுவதற்கு தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும்; தமிழ்நாட்டிற்கு புதிய தொடர்வண்டித் திட்டங்கள் தேவை என்றால் அதற்கான நிலங்களை கையகப்படுத்தித் தருவதுடன், திட்டச் செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூட, அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டங்களில் 9 திட்டங்களின் மதிப்பான ரூ.16,235 கோடியில் 60% தொகையான ரூ.9,847 கோடியை கர்நாடகம் வழங்கும்; 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதற்கான செலவு முழுவதையும் தமது அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தை ஆளும் விளம்பர மாடல் அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை.
தமிழக அரசு
தொடர்வண்டித் திட்டங்கள் அதிகமாக தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. எனவே, சென்னை - கடலூர், திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய புதிய பாதைத் திட்டங்களை கிடப்பில் போடும் முடிவைக் கைவிட்டு, அத்திட்டங்களுக்கு உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். அத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தித் தருவது, திட்டச் செலவுகளை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படுவதற்கு தமிழக அரசும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications