யு டர்ன்? நாடாளுமன்றத்தில் சிஏஏவை ஆதரித்துவிட்டு சட்டசபையில் எதிர்த்த பாமக.. ஜிகே மணி பேசியது என்ன?
சென்னை: சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை இன்று சட்டசபையில் ஆதரித்து பாமக பேசியது. முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து பாமக தலைவர் ஜி.கே மணி இன்று அவையில் பேசியது.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்ட திருத்தத்தை எதிர்ப்போம். இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதிமுக தீர்மானம் தாக்கல் செய்யப்படும் முன்பே வெளிநடப்பு செய்தது. பாஜக கட்சி இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. இந்த தீர்மானம் திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

பாமக
ஆச்சர்யமாக சிஏஏவிற்கு எதிரான தீர்மானத்தை பாமக சட்டசபையில் ஆதரித்து பேசியது. பாமக தலைவர் ஜி.கே மணி இன்று சட்டசபையில் பேசுகையில், முதல்வர் அவர்கள் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிராக அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டி இருப்பது என்னவென்றால், உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு ஆபத்து என்றால் உடனே எதிர்பார்ப்பது தாய் தமிழ்நாட்டை. தமிழ்நாடு தங்களை காக்கும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.

இலங்கை தமிழர்
இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது அவர்கள் தமிழ்நாட்டிற்குதான் வந்தார்கள். தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிற்குத்தான் அவர்கள் ஓடி வந்தனர். தமிழ்நாடு அரசு இவர்களுக்கு சிறந்த உதவிகளை செய்து வருகிறது. பல உதவிகளை தமிழ்நாடு அரசு அவர்களுக்கு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் இதுவரை இல்லாத அளவிற்கு 317 கோடி ரூபாய் நிதியை இலங்கை தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்து, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி இருக்கிறார்.

அநீதி இழைக்கப்படுகிறது
அப்படிப்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ முடியாத நிலை உள்ளது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் அவர்கள் குடியுரிமை பெற்று வாழ முடியாத நிலை உள்ளது. சிஏஏ சட்ட திருத்தம் இந்த உரிமையை இலங்கை தமிழர்களுக்கு மறுக்கிறது. இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், என்று பாமக தலைவர் ஜி.கே.மணி இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார். பாமக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது.

பாமக
ராஜ்ய சபாவில் பாமக எம்பி அன்புமணி இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தார். இதன் மூலமே பாஜக அப்போது ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாமலே அதிமுக, பாமக போன்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த நிலையில் தற்போது இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை பாமக சட்டசபையில் ஆதரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications