என்டிஏ கூட்ட மேடையில் மாம்பழ சின்னம்.. அரசியல் அறமற்ற செயல் இது.. கொதிக்கும் ராமதாஸ்!
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் அனுமதி பெறாமல் மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தச் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், இப்படியான அரசியல் அறமற்ற செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியின் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் அத்தனை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜிகே வாசன், டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட அத்தனை கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் மேடையின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாமகவின் சின்னமான மாம்பழமும் இடம்பெற்றுள்ளது. இது ராமதாஸ் தரப்பை கொந்தளிக்க செய்திருக்கிறது.
ஏனென்றால் மாம்பழ சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தின் மேடையில் பயன்படுத்துவது சட்டவிரோதம் மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்தச் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம்.
அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாடு மக்களை ஏமாற்றும் செயலாலும். பிரதமர் நிகழ்ச்சியில் இத்தகைய சட்டவிரோத செயல் பிரதமர் பதவிக்கு இழைக்கப்படும் அவமரியாதை. தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கண்டித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications