தேர்தல் அறிக்கையில் கூறிய.. பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு எப்போது?.. முதல்வருக்கு, அன்புமணி கேள்வி!
சென்னை: மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே பெட்ரோல் டீசல் விலை விண்ணை நோக்கி செல்கிறது. அதுவும் 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது.

தமிழகத்தில் பெட்ரோல் சதம்
ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி சதமடித்து சென்று வருகிறது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95-ஐ தாண்டி விட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் இன்று பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

மக்கள் கடுமையாக பாதிப்பு
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ100-ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்.

இது நியாயமல்ல
கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயர்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதி எங்கே?
மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாக கிடைக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications