பாஜகவை கழட்டிவிட்ட பாமக? இன்று காலை அவசர ஆலோசனைக் கூட்டம்.. எடப்பாடிக்கு இதுதான் டைம்
சென்னை: பாஜகவுடன் பாமக சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் முன்பாக இன்று காலை பாமகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது.வேட்பு மனுதாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவு பெறுகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உடனடியாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களையும் உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், வேட்பாளர்கள் தேர்வு வரை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்றைக்கு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்துவிட்டால், திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது தெரிந்துவிடும்.. இதனால் திமுக கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுபெறவில்லை.. தேமுதிக கேட்ட தொகுதிகளை தருவதற்கு அதிமுக தயாராக இல்லையாம்.. மாநிலங்களை எம்பி பதவி தேமுதிக கேட்டதாகவும், ஆனால் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தேமுதிக நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை..
பாமகவை பொறுத்தவரை அதிமுக மற்றும் பாஜக உடன பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கிட்டத்தட்ட அதிமுக உடன் கூட்டணியை பாமக இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜக கூட்டணியில் பாமக சேராது என்பது உறுதியாகிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் தூதுவராக எம்.எல்.ஏ. அருள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.
பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏழு தொகுதிகள் வரை பாமகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்று சொல்கிறார்கள்..
இந்நிலையில் அதிமுக பாமக கூட்டணி இன்று மாலைக்குள் உறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், பாமக மாநில நிர்வாகிளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறத..
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமகவிற்கு செல்வாக்காக உள்ள எந்தெந்த தொகுதிகளை கேட்பது மற்றும் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. இந்த கூட்டத்தில் தொகுதிகளை இறுதி செய்து பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் பாமக தங்கள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த பாஜக ஏமாற்றத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
பாமக வருகைக்காகவே பாஜக இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யாமல் இருந்ததாகவும், இனி அந்த கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து அறிவிக்கும் என்றும் சொல்கிறார்கள்.. மொத்தத்தில் அடுத்த இரண்டு நாளில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் யார் யார் எந்த தொகுதி என்பது இறுதியாகிவிடும் என்பது உறுதியாகி உள்ளது..












Click it and Unblock the Notifications