பைத்தியம்போல் சில நேரமும்.. பைத்தியம் தெளிந்தவர் போல் சிலநேரமும்..! கவிஞர் வைரமுத்துவின் எக்ஸ் பதிவு
சென்னை : வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர், தொடர்பற்ற மொழிகள் பேசுவர் என கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ரசிகர்களால் தமிழ் திரையுலகில் கொண்டாடப்படுகிறார். மண் மணம் மாறாத கவிகளுக்குச் சொந்தக்காரான இவர், இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார்.

ரஜினி , அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஓப்பனிங்க் பாடல்களையும் எழுதி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர். பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களிடமும், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி வருகிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தாலும், இலக்கிய உலகிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர் போன்ற நாவல்களும், கவிதைத் தொகுப்புகளும் இன்று வரை இலக்கிய உலகிலும், விற்பனையிலும் தனி இடத்தை பெற்றுள்ளன. அதே நேரத்தில் இளையவர்களுடனும் அடிக்கடி பணியாற்றி வருபவர் வைரமுத்து
அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் எப்போது ஆக்டிவாக இருக்கும் வைரமுத்து அவ்வப்போது எக்ஸ் பக்கத்தில் சமூக அவலங்கள், அரசியல் நிகழ்வுகள், சினிமா, இலக்கியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.. இரக்கத்திற்குரியவர்கள் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
'Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
எஸ்பிபி.. பாட்டுச் சுந்தரா! என் முதல் பாட்டின் முதல் குரல் நீ.. வைரமுத்து கவிதாஞ்சலி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications