மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன் தீ வைத்த இளைஞர்.. தட்டி தூக்கிய சென்னை போலீஸ்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு தீ வைத்து எரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவில் முன்பு தீ வைத்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக கோயிலின் கதவு சேதம் அடையவில்லை. கோயிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.

இதையடுத்து அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையில் போலீஸார் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது கோயில் பாதுகாவலர்கள் யாரும் அங்கு இல்லை என்றும், கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
மது போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தீ வைத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோயில் வாசலில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
இந்த நிலையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்ததாக அனகாபுத்தூரை சேர்ந்த தீனதயாளன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications