செம்மரக் கடத்தல் - சென்னை தொழிலதிபரை கடத்திய வழக்கில் தேடப்படும் தவ்பீக் கூட்டாளி கோவையில் கைது
சென்னை: சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ2 கோடி பறித்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தவ்பீக்கின் கூட்டாளி கோவையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர். அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் திவான் அக்பரை விசாரித்த ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்று ரூ2 கோடி பறித்தது.

இது தொடர்பாக திவான் அக்பர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தவ்பீக்கின் மனைவி சல்மாவும் போலீசில் சிக்கினார். இந்த நிலையில் தவ்பீக்கை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இதனிடையே கோவையில் தவ்பீக்கின் கூட்டாளி கட்ட காதர் சிக்கியுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் கட்ட காதர் தேடப்பட்டு வந்தவர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். செம்மரக் கடத்தல் விவகாரத்தில்தான் தொழிலதிபர் திவான் அக்பர் கடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்











Click it and Unblock the Notifications