இரவில் ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார்.. சிக்கலில் பாஜகவை சேர்ந்த நடிகை -கமிஷ்னருக்கு பறந்த பரபர புகார்
சென்னை: பாஜகவில் உறுப்பினராக இருக்கும் பிரபல நடிகை ஜெயலட்சுமிக்கு எதிராக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் கந்துவட்டி கொடுமை புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜக சார்பாக சட்டசபை தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில்தான் நடிகை ஜெயலட்சுமிக்கு எதிராக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் ஜெயலட்சுமி மூலமாக சுயஉதவிக்குழு கடன் வாங்கி இருக்கிறார். அந்த பகுதியை சேர்ந்த பல பெண்கள் ஒன்றாக சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறார்கள். இந்த குழுவிற்கு ஜெயலட்சுமி வங்கி மூலம் 10 பைசா வட்டி விகிதத்தில் கடன் வாங்கி கொடுத்து உள்ளார். மொத்தம் 9 பெண்களுக்கு வங்கியில் இருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார்.

கடன்
குறைந்த வட்டிதான் என்பதால் அவர்களும் நம்பிக்கையாக கடன் வாங்கி உள்ளனர். எப்போதும் போல கடன் வாங்குவதற்காக கேன்சல் செய்யப்பட்ட செக் ஸ்லீப் கொடுத்துள்ளனர். மாதா மாதம் அந்த பெண்களும் முறையாக வட்டியும், முதலுமாக இஎம்ஐ கட்டி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து திடீரென அந்த பெண்களை சந்தித்த ஜெயலட்சுமி.. நீங்கள் கொடுத்தது வட்டி மட்டும்தான் என்று கூறி உள்ளார்.

புகார்
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண்கள் கொடுத்த புகாரில், நாங்கள் மாதமாதம் இஎம்ஐ கட்டிய பின்பும்.. நாங்கள் வெறும் வட்டி மட்டும் கொடுத்ததாக நடிகை ஜெயலட்சுமி கூறுகிறார். நாங்கள் பல மாதம் பணம் கொடுத்தும் அது அனைத்தும் வட்டிக்கே கழிந்துவிட்டது, இனிதான் நீங்கள் அசலை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டுகிறார்.

ஆண்கள்
அதோடு இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார். எங்கள் வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி உங்களை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறி மிரட்டுகிறார். அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் ஜெயலட்சுமியுடன் வந்து அடிக்கடி எங்களை வந்து மிரட்டுகின்றனர். இதனால் நடிகை ஜெயலட்சுமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மீது அந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications