அதிமுக போராட்டம் எதிரொலி.. சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராடி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராடி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.
இந்த நிலையில் சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

[சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி ]
மதுரையில் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகள், கோவையில் சாந்தி தியேட்டர், திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகள் பல என பல இடங்களில் போராட்டம் நடக்கிறது. சென்னையில் தியேட்டர்கள் முன்னில் போராட்டம் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுக்க சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராடும் நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல தியேட்டர்களுக்கு வெளியே பதட்டமான சூழ்நிலையில் நிலவி வருகிறது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து தியேட்டர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில தியேட்டர்களில் சர்கார் காட்சிகள் ரத்து செய்யப்படுவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
-
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.. சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு? விஜய் முக்கிய மீட்டிங் -
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை! விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி











Click it and Unblock the Notifications