Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அயனாவரத்தில் ரவுடி பெண்டு சூர்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் எஸ்ஐ.. நடந்தது என்ன?

சென்னை அயனாவரத்தில் ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அயனாவரத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடி பெண்டு சூர்யாவை பெண் எஸ்ஐ மீனா துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

சென்னை அயனாவரத்தில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

இது தொடர்பாக அயனாவரம் போலீஸார் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரு சக்கர வாகனத்தை கவுதம் இயக்கி வந்ததும் அவரது பின்னால் சூர்யா என்கிற பெண்டு சூர்யா, அஜித் ஆகியோர் அமர்ந்து வந்ததும் தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

அயனாவரம்

அயனாவரம்

இதைத் தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமைக் காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளான கவுதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்தனர். தலைமறைவான பெண்டு சூர்யாவை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்

அப்போது பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விரைந்தனர். அங்கு தனது சகோதரி வீட்டில் பதுங்கியிருந்த பெண்டு சூர்யாவை கைது செய்தனர்.

சென்னை அயனாவரம்

சென்னை அயனாவரம்

அவரை சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே பெண்டு சூர்யா சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து வாகனத்தை போலீஸார் ஓரமாக நிறுத்தினர். அப்போது பெண்டு சூர்யா சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்ற போது தப்பி ஓடினார்.

தலைமைக் காவலர் காயம்

தலைமைக் காவலர் காயம்

உடனே அவரை தலைமைக் காவலர் அமானுதீன் மற்றும காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் துரத்தி சென்றனர். அப்போது அங்கு கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை பெண்டு சூர்யா தாக்கினார். இதில் தலைமைக் காவலர் அமானுதீன் மற்றும் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் சரவணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு

இதைத் தொடர்ந்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெண்டு சூர்யாவின் முழங்காலில் சுட்டார். அப்போது கீழே விழுந்த பெண்டு சூர்யாவை பிடித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அது போல் தாக்குதலில் காயமடைந்த இரு காவலர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 வழக்குகள்

14 வழக்குகள்

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பெண்டு சூர்யா மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க நகை பறிப்பு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனுடன் போலீஸாரை தாக்கியதாக கொலை முயற்சி வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+