களை எடுக்கும் காவல்துறை.. ஒரே வாரம்! சென்னையில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: சென்னையில் பல்வேறு தொடர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை தெரிவித்து உள்ளதாவது, "சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கடந்த 01.01.2024 முதல் 24.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 13 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 60 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18.01.2024 முதல் 24.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள்: 1.நயன் பக்டி, வ/28, த/பெ.நில்ரடன் பக்டி, பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவர் கடந்த 28.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக. C-1 பூக்கடை காவல் நிலையத்திலும், 2.மாரிமுத்து (எ) மாரி (எ) ஆலிகுடி மாரி. வ/37. த/பெ.சங்கரவேல் தேவர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் என்பவர் கடந்த 05.09.2023 அன்று ஜெகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக V-7 நொளம்பூர் காவல் நிலையத்திலும், 3.அகஸ்டின் (எ) கான்டு, வ/29, த/பெ.சார்லஸ், வடபழனி, சென்னை என்பவர் கடந்த 22.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் (PEW/AnnaNagar) வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
4.கஞ்சாமணி (எ) தீனதயாளன், வ/24, த/பெ.கருணாகரன். புளியந்தோப்பு. சென்னை என்பவர் கடந்த 29.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்திலும், 5.மியா (எ) ஆனந்தவள்ளி, பெ/வ-25. க/பெ.லோகநாதன், புளியந்தோப்பு, சென்னை என்பவர் கடந்த 30.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
6.சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன், வ/28, த/பெ.முருகன், எம்.ஜி.ஆர்.நகர். சென்னை 7.டேவிட் (எ) டோலாக், வ/28, த/பெ.லட்சுமணன். எம்.ஜி.ஆர்.நகர். சென்னை ஆகிய இருவரும் கடந்த 31.12.2023 அன்று அஜய் என்ற சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்திலும், 8.சுபாஷ் சந்திரபோஸ், வ/23, த/பெ.வீராசாமி. கள்ளுக்குட்டை, சென்னை என்பவர் கடந்த 16.12.2023 அன்று சரி பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்திலும், 9.திருமுருகன் (எ) கூனி முருகன், வ/35, த/பெ.அன்பு, செனாய் நரை. சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, F-2 எழும்பூர் காவல் நிலையத்திலும், 10.ஆனந்தன், வ/37. த/பெ.தண்டபாணி, வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மற்றும் போதை பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
11.மனோஜ்குமார். வ/37, த/பெ.ராமகிருஷ்ணன். கொடுங்கையூர். சென்னை என்பவர் கடந்த 31.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும், 12.நவீன் (எ) டக்கி, வ/28, த/பெ.இளங்கோ, புது வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 02.01.2024 அடிதடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், 13.நாகராஜ் (எ) எம்.சி.நாகராஜ், வ/43, த/பெ.முகுந்தன். வியாசர்பாடி, சென்னை என்பவர் 03.01.2024 அன்று அடிதடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் கைது செய்யப்பட்டு. நீதிமன்றக் காவலுக்கு
அனுப்பப்பட்டனர்.
14.தங்கபாண்டியன், வ/45, த/பெ.அழகர்சாமி, கொடுங்கையூர், சென்னை என்பவர் கடந்த 05.01.2024 அன்று தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக M-1 மாதவரம் காவல் நிலைத்திலும், 15.இர்பான் கவுஸ், வ/42. த/பெ.குலாம் கவுஸ், கனத்துார். சென்னை என்பவர் கடந்த 17.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக F-5 சூளைமேடு காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
16.செல்வராஜ், வ/40, த/பெ.தங்கராஜ். சுனாமி குடியிருப்பு, எண்ணூர், சென்னை என்பவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும், 17.சுரேஷ் குமார் (எ) பாபா சுரேஷ், வ/24, த/பெ.கன்னியப்பன். ஆர்.ஏ.புரம், சென்னை 18. கார்த்திக் (எ) கொக்கி கார்த்திக்,வ/25, த/பெ.சுகுமார். 6வது தெரு, அன்னை தெரசா நகர். எஸ்.கே.பி புரம், ஆகிய இருவரும் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக E-4 அபிராமபுரம் காவல் நிலையத்திலும், 19.தென்றல், வ/32, த/பெ.பாஸ்கர். எஸ்.எம். நகர், நந்தனம். சென்னை என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
20.முரளி (எ) குசுமி முரளி, வ/22. த/பெ.முருகன், எண்.1/151, பொத்தூர் மெயின் ரோடு, செங்குன்றம். சென்னை 21.நாகராஜ் (எ) யுடியூப் நாகராஜ், வ/23, த/பெ.குமார். பிவி காலனி, கரிமேடு 2வது தெரு, சென்னை ஆகிய இருவரும் 31.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக M-3 புழல் காவல் நிலையத்திலும், 22.செல்வராஜ், வ/50, த/பெ.முருகேசன், எண்.5. விலாங்காடு பாக்கம். செங்குன்றம், சென்னை என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக M-1 மாதவரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
23. சுரேஷ்குமார், வ/23, த/பெ.பிரபாகரன். அண்ணாமலை நகர், திருவொற்றியூர், சென்னை 24.ஜோதி (எ) ஜோதிபாசு, வ/24, த/பெ.மகேந்திரன். விநாயகர் தெரு, பொழிச்சலூர், பல்லாவரம், சென்னை ஆகிய இருவரும் ஷோபல்குமார் என்பவரை 30.12.2023 அன்று கொலை செய்த குற்றத்திற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் 25.பாலாஜி. வ/49, த/பெ.ஞானசுந்தரம். எண்.2/979, பெரியார் நகர் மெயின் ரோடு, மடிப்பாக்கம் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு. நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவிலும் (EDF-3) வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
26.ராமு, வ/46, த/பெ.கருப்பண்ணன், திருமங்கலம் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நிலத்தை ஆக்கிரமித்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவிலும் (Forgery Wing) லிலும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நயன் பக்டி. மாரிமுத்து (எ) மாரி (எ) ஆலிகுடி மாரி, அகஸ்டின் (எ) கான்டு ஆகிய 3 நபர்களை கடந்த 18.01.2024 அன்றும், கஞ்சாமணி (எ) தீனதாயாளன், மியா (எ) ஆனந்த வள்ளி ஆகிய இருவரை 19.01.2024 அன்றும், சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன், டேவிட் (எ) டோலாக், சுபாஷ் சந்திரபோஸ், திருமுருகன் (எ) கூனி முருகன், ஆனந்தன் ஆகிய 5 நபர்களை 22.01.2024 அன்றும், மனோஜ்குமார். நவீன் டாக்கி, நாகராஜ் (எ) எம்சி நாகராஜ், தங்கப்பாண்டியன், இர்பான் ஹவுஸ், ஆகிய 5 நபர்களை 23.01.2024 அன்றும் செல்வராஜ், சுரேஷ்குமார், கார்த்திக் (எ) கொக்கி கார்த்திக், தென்றல், முரளி (எ) குசுமி முரளி, நாகராஜ் (எ) யுடியூப் நாகராஜ், செல்வராஜ், சுரேஷ்குமார். ஜோதி (எ) ஜோதிபாசு, பாலாஜி, ராமு ஆகிய 11 நபர்களை 24.01.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 26 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications