நடிகைகளுடன் ஜாலி.. வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி!
Recommended Video
சென்னை: முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்குமாம்.. இதில் ஏராளமான பணத்தை நடிகைகள், துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளார்!
லலிதா ஜூவல்லரி கொள்ளையின் முக்கிய குற்றவாளி முருகன். இவன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்ததையடுத்து, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இப்போது நம் போலீசார் முருகனை தமிழகத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் முருகனிடம்தான் உள்ளது.

12 கிலோ நகைகள்
திருச்சி திருவரம்பூர் பூசை துறை காவேரி படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ நகைகள் இப்போதைக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகள் பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்சி கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகள் எங்கே இருக்கின்றன என்பது இனிமேல்தான் தெரியும். இதற்காக 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏகப்பட்ட வழக்குகள்
நாடு முழுவதும் 5 வருஷத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளான் முருகன். ஆனால், ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனராம். மீதமுள்ள நகைகளை பற்றி மூச்சு கூட விடக்காணோம். முருகன் வாயில் உண்மையை வரவழைப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமாம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போலீசாருக்கே தண்ணி காட்டி வந்துள்ளான்.

பினாமி சொத்து
எப்படியும் 100 கோடி ரூபாய் கொள்ளை அடித்து வைத்திருப்பான் என்கிறார்கள். ஏனென்றால் கொள்ளையடித்தது முழுக்க கோடீஸ்வர வீடுகள், பேங்குகள்தான்! இதில் பல சொத்துக்களை தன்னுடைய சொந்தக்காரர் பெயரில், பினாமி பெயரில் முருகன் பதுக்கி இருப்பதாக தெரிகிறது.

நடிகைகள்
இதுபோக, இந்த திருட்டு பணத்தில் சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிகொண்டு பணத்தை கொண்டு போய் தன் படக்கம்பெனியில் கொட்டி உள்ளான் முருகன். நடிகைகள், துணை நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கொள்ளை அடித்த பணம் சுமார் ரூ.100 கோடி, 2 சொகுசு கார்கள் இதெல்லாம் எங்கே இருக்கிறது, என்பதை இனிமேல்தான் நம் போலீசார் விசாரிப்பார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications