சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது.. எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு!
சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சென்னை: சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நாளுக்கு நாள் தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையேயான பிரச்சனை முற்றி வருகிறது. அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.

தினமும் டிஜிபி அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் பொன்.மாணிக்கவேல் புகார் அளித்து வருகின்றனர். ஏற்கனவே பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
இந்து அறநிலையத்துறையும் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்து உள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக பேட்டியளித்து வருகின்றனர். கடைசியாக மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார். அதில், ஊழல்வாதிகள் கோவில் சொத்துக்களை திருடி இருக்கிறார்கள். மக்கள் பணத்தை, கோவிலுக்கு சொந்தமான பணத்தை ஊழல்வாதிகள் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவர்கள்தான் தற்போது போய் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளிக்கிறார்கள். அவர்கள் அச்சத்தால் போலீசில் புகார் அளிக்கின்றனர். சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊழல் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதற்காக நான் போராட வேண்டிய அவசியம் கூட வந்துவிடும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications