கொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்
மனைவியை கத்தியால் குத்திவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
Recommended Video
சென்னை: படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், தூக்கில் சடலமாக தொங்கிய தந்தை.. இவர்கள் இருவரையும் பார்த்து நடுங்கி கதறி அழுகிறான் இவர்களது 7 வயது மகன்!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் போலீஸ்தான் நரேஷ். மனைவி பெயர் ஜெயஸ்ரீ. 7 வயது மகனுடன் புழல் திருமால் நகரில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டு கீழ் போர்ஷனில் ஜெயஸ்ரீயின் அம்மா வீடு உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கல்யாணம் முதலே சண்டைதான்.
நேற்றுமுன்தினமும் இப்படி தகராறு வந்துவிடவும், கோபித்து கொண்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார் ஜெயஸ்ரீ. பிறகு சமாதானப்படுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் நரேஷ். ஆனால் வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் தகராறு ஆரம்பிக்க, ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் நரேஷ்.

சந்தேகம்
போலீஸ்காரர் ஒருவர் மனைவியை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை பணிச்சுமையால் நரேஷ் இறந்துவிட்டாரா என்றுகூட சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் விசாரணையில் இது முழுக்க முழுக்க குடும்ப பிரச்சனை என்பது தெரியவந்துள்ளது.

தகராறு
நரேஷ் குடிபோதைக்கு அடிமை என்பது ஜெயஸ்ரீயின் பிரச்சனையாக இருந்திருக்கிறது. அதேபோல, நரேஷ் ஜெயஸ்ரீ மீது நிறைய சந்தேகப்பட்டுள்ளார். குடிபோதை, சந்தேகம் இந்த இரண்டும்தான் தம்பதிக்குள் இவ்வளவு காலம் நீடித்த தகராறுக்கு மூல காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

ரத்த வெள்ளம்
சம்பவத்தன்று, சமாதானப்படுத்தி ஜெயஸ்ரீயை வீட்டுக்கு நரேஷ் கூட்டி வந்தவுடனேயே, தண்ணி அடிக்க ஆரம்பித்துள்ளார். அதனால்தான் சண்டை வெடித்துள்ளது. ஜெயஸ்ரீ, கணவனை கண்டிக்க, அதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜெயஸ்ரீ வயிற்றில் குத்தியுள்ளார் நரேஷ். மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்ததை பார்த்ததும் பயந்துபோய்விட்டார்.

துப்பட்டா
உடனே ஜெயஸ்ரீயின் துப்பட்டாவை எடுத்து கொண்டு வேறு ஒரு ரூமில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நடக்கும்போது, 7 வயது மகன் இன்னொரு ரூமில் தூங்கி கொண்டு இருந்திருக்கிறான்.

விசாரணை
பொழுதுவிடிந்ததில் இருந்தே மகன் அழுது கொண்டே இருக்கவும்தான் அக்கம்பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக பார்த்து, போலீசுக்கு தகவல் தந்துள்ளனர். மனைவி மீது அளவுக்கு அதிகமான சந்தேகமும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் மதுவையும் நாடியதும்தான், இந்த கொலை, தற்கொலைக்கு காரணம் என்பது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications