Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வழக்கு தான் காரணம்.. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சர்ச்சைக்குள்ளானது ஏன் தெரியுமா? பின்னணி தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை விவகாரத்தில் பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரத்தில் அவர் மீதான நடவடிக்கை எடுக்க காரணமாக சொல்லப்படும் விவகாரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர் ஏடிஎஸ்பி வெள்ளதுரை. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vellathurai Police Tamil Nadu


கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்தார் வெள்ளத்துரை. தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை. இந்த நிலையில் இன்று வெள்ளத்துரை பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

சர்ச்சை கிளம்பியதற்கு காரணம் என்ன?: ஆனால், நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட வெள்ளத்துரை சஸ்பெண்ட் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இன்று இரவு தமிழக அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அந்த உத்தரவில், வெள்ளத்துரையின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. "என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி


காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை விவகாரத்தில் சர்ச்சை கிளம்பியதற்கு காரணம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சப் இன்ஸ்பெக்டர் கொலை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள காவல் விலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினத்தின்பொழுது, வேம்பத்தூர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுது பிரபு என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியது. இந்த மோதலின் போது உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

போலீஸ் என்கவுண்டர்: இந்த வழக்கு தொடர்பாக பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தது. இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் போலீசார் அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். தப்பிச் சென்றவர்கள் தலைமறைவாக இருந்த இடத்தை காவலர்கள் கண்டுபிடித்தனர்.

அப்போது வெள்ளத்துரை தலைமையிலான அதிரடி படையினர் அங்கு விரைந்தது. பொலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய 2 பேரும் வெடிகுண்டுகளை வீசி தாக்க முயற்சி செய்தனர். அப்பொது போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

கொக்கி குமார் உயிரிழப்பு: இந்த வழக்கில் தொடர்புள்ள மூன்றாவது குற்றவாளியான கொக்கி குமார் என்கிற ராமு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம், வழிப்பறி செய்தார். இந்த வழக்கில் கொக்கி குமாரை கைது செய்ய போலீசார் சென்ற போது போலீசாரை தாக்க கொக்கி குமார் முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்தனர்.

போலீசாரிடம் தப்பிக்க முயன்ற போது கொக்கி குமார் உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. கொக்கி குமாரை பிடித்த போலீசார், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கொக்கி குமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் கொக்கி குமார் உயிரிழந்துள்ளார். ‌

சிபிசிஐடி இறுதி அறிக்கை:
கொக்கி குமாரின் தந்தை பாண்டிமுத்து, அதிகாரி வெள்ளத்துரை தான் சித்திரவதை செய்து தனது மகனை கொலை செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கடந்த 2018ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த விசாரணையில் கொக்கி குமார் காவல்துறையினர் பிடிக்க முயன்ற பொழுது விழுந்ததாகவும், குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. மேல் வழக்கு தொடர வேண்டாம் என சிபிசிஐடி போலீசார் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது.

இதற்கிடயே 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை வழக்கு தொடர்பாக மெரினா காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடம் உள்துறை விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சில மணி நேரங்களிலேயே பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+