நான் கிளம்ப மாட்டேன்.. காரில் உட்கார்ந்து கொண்டு பிடிவாதம் பிடித்த நல்லகண்ணு.. வியந்த அதிகாரிகள்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Recommended Video

சென்னை: புதுக்கோட்டை - தஞ்சை நெடுஞ்சாலையில்.. காரில் உட்கார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிடிவாதம் பிடித்து கொண்டு இருந்தார்.. ஏன் தெரியுமா?
இருக்கும் தமிழக அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மட்டுமே என்பதை நாம் கர்வமாகவும் உரக்கமாகவும் சொல்லலாம்.
எதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் யார் என்று கேட்டால் இந்த "நவீன கக்கன் நல்லகண்ணு" மட்டும்தான் என்று சொல்ல தோன்றுகிறது. வாழ்நாளில் எந்தவித விமர்சனத்துக்கும் ஆளாக நல்லக்கண்ணு பற்றின ஒரு செய்திதான் இது:

அதிகாரிகள்
வாக்காளர்களுக்காக பணம் தருவதாக ஒரு பக்கம் புகார்கள் எழுந்து வந்தாலும், மறுபக்கம் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து சந்தேகத்திற்குரிய வகையிலான பணத்தினை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு வண்டியையும் விடாமல் எல்லாவற்றையும் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

காரை நிறுத்தினர்
இந்நிலையில் புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நல்லக்கண்ணு அந்த வழியாக காரில் வந்தார். ஆனால் காரில் இருப்பது நல்லக்கண்ணு என்று தெரியாத அதிகாரிகள் வண்டியை கை காட்டி நிறுத்தினர்.

சோதனை
பிறகு காருக்குள் எட்டி பார்த்தபோதுதான் உள்ளே நல்லக்கண்ணு உட்கார்ந்திருந்ததை கவனித்தனர். உடனே அதிகாரிகள், "ஐயா.. நீங்களா? நல்லா இருக்கீங்களா? ஒன்னுமில்லை.. தேர்தலுக்காக வண்டிகளை சோதனை செய்யணும்னு எங்களுக்கு உத்தரவு. அதனாலதான் நிறுத்திட்டோம்.. இது உங்க வண்டின்னு தெரியாது" என்றனர்.

ஐயா.. நீங்களா..
அதற்கு நல்லக்கண்ணு "பரவாயில்லை.. நீங்க உங்க கடமையை தானே செய்றீங்க.. வந்து சோதனை பண்ணுங்க" என்றார். அதற்கு அதிகாரிகள், "உங்க வண்டியை சோதனை போட்டால் அது என்னங்கய்யா இருக்க போகுது.. அதுல எதுவுமே இருக்காது. இது எங்களுக்கு மட்டும் இல்லை.. எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்னுதானே. நீங்க கிளம்புங்க ஐயா" என்றனர்

பிடிவாதம்
ஆனாலும் நல்லக்கண்ணு விடவே இல்லை.. "முடியாது.. நீங்க சோதனை போடாம நான் இங்க இருந்து போக மாட்டேன். யாராக இருந்தாலும் சரி, சோதனை போட்டுட்டு, வண்டியில எதுவும் இல்லைன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு அனுப்புங்க" என்றார்.

கார் கிளம்பியது
இதனால் அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டாலும், நல்லக்கண்ணு பிடிவாதம் பிடித்ததால், வேறு வழியில்லாமல் காரை சோதனை செய்தனர். எதிர்பார்த்தபடியே அங்கே பணம், பொருள், என ஒன்றுமே இல்லை. இதனை அதிகாரிகள் தெரிவித்தபிறகுதான், கார் அங்கிருந்தே கிளம்பியது. கார் அங்கிருந்து நகர்ந்து கண்ணுக்கு தெரியும்வரை சென்று மறைந்தாலும், நல்லக்கண்ணுவை பற்றி அதிகாரிகள் புல்லரித்து போய் பேசிக் கொண்டே இருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications