ப்ரீ பால் டவர் ராட்டினம் அறுந்து விழுந்த விவகாரம்.. சென்னை குயின்ஸ் லேண்டை மூட அதிரடி உத்தரவு
Recommended Video
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள பிரபல குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை, தற்காலிகமாக மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் குயின்ஸ் லேண்டில் ராட்டினம் ஒன்று அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள பழஞ்சூர் பகுதியில் மிகவும் பிரபலமான குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இப்பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. ஆண்டின் பெரும்பாலான நாட்களில் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கம்
சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் வார நாட்களில் கூட வகுப்பை கட் அடித்து விட்டு சுற்றக்கூடிய இடங்களில் குயின்ஸ் லேண்டும் ஒன்று மாணவர்கள் தவிர தினந்தோறும் சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் ப்ரீ பால் டவர் எனப்படும் ராட்டின விளையாட்டு பிரபலமானது இந்த ப்ரீ பால் டவர் ராட்டினமானது மிகப்பெரிய ராட்சத இரும்பு தூண்களுக்கு நடுவில் இருபுறமும் இரும்பு தொட்டில் போல அமைக்கப்பட்டிருக்கும்
பொதுமக்கள் அந்த இரும்பு தொட்டிலில் அமர்ந்தவுடன் இரும்பு தொட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மேலே சென்று, வேகமாக கீழே இறங்கும் வகையில் இந்த ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ரீ பால் டவர் ராட்டினத்தில் சில பொதுமக்கள் ஏறியுள்ளனர். அப்போது ப்ரீ பால் டவர் ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள இரும்பு தொட்டிலின் கயிறு திடீரென அறுந்தில் தொட்டில் கீழே விழுந்தது நல்லவேளையாக இரும்பு தொட்டிலானது குறைந்த உயரத்திற்கு தான் அப்போது மேலே சென்றது
உயரமான பகுதிக்கு சென்ற பின்னர் இரும்பு தொட்டிலின் கயிறு அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். கீழ் பகுதியில் இருந்த போதே ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கயிறு அறுந்ததால் அதில் இருந்த பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த காட்சிகளை அங்கு இருந்த ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட அதிரடியாக உத்தரவிட்டனர்
வருவாய் துறையினரின் ஆய்வுக்கு பிறகே குயின்ஸ் லேட்ண்ட் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications