நாளை எலக்ஷன் ரிசல்ட்! டி.ஆர். பாலு வீட்டை கேமராவுடன் நோட்டம்.. போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திநகரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு வீட்டை நோட்டமிட்டதாக 7 வாகனங்களை தகவல் தொழில்நுட்ப பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் டி.ஆர்.பாலு. இவருடைய மகன் டி.ஆர்.பி.ராஜா தற்போது தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ளார்.

chennai t r baalu

டி.ஆர்.பாலு தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இந்தியாவில் மீண்டும் 3ஆவது முறையாக பாஜக ஆட்சி ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. கருத்துக் கணிப்புகள் எத்தனையோ முறை பொய்யாகியுள்ளது என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை திநகரில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு வீட்டை 7 வாகனங்கள் நோட்டமிட்டதை அடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது திநகரில் டி.ஆர்.பாலு வீட்டை 7 வாகனங்கள் 360 டிகிரி ஆங்கிளில் வீடியோ எடுத்து நோட்டமிட்டது போல் தெரிகிறது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த வாகனங்களை மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது டெக் மகிந்திரா நிறுவன ஊழியர்கள் அந்த வாகனங்களில் இருந்தனர். அவர்களை விசாரித்த போது டெக் மகிந்திராவும் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து மேப்பை அப்டேட் செய்வதற்காக சென்னையில் பல்வேறு இடங்களை வீடியோ எடுத்ததாக கூறினர்.

ஆப்பிள் மேப் மற்றும் ஸ்ட்ரீட் வியூ அப்டேட்டுக்காக வீடியோ எடுத்ததாக கூறிய அவர்களின் 7 வாகனங்களையும் பறிமுதல் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை பிரிவு போலீஸார் டெக் மகிந்திரா ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சென்னையில் அவர்கள் 360 டிகிரி கேமரா மூலம் எத்தனை இடங்களை எந்தெந்த கோணத்தில் வீடியோ எடுத்துள்ளனர் என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+