நெற்றியை துளைத்த குண்டு.. எஸ்ஐ சேகர் தன்னை தானே சுட்டு கொண்டது ஏன்.. சென்னை ஷாக்கின் பரபர பின்னணி
சிறப்பு எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: நெற்றிப் பொட்டில் வைத்து கொண்டு எஸ்ஐ சேகர் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி இன்னும் சென்னையைவிட்டு போகவில்லை.. எதற்காக சேகர் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை தி.நகர் ராமானுஜம் தெருவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினுடைய மாநில தலைமை அலுவலகம் உள்ளது.. இதற்கு வேதாந்தம் என்பவர் தலைவராக உள்ளார்.
இவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்தான் எஸ்.ஐ. சேகர்.. ஸ்பெஷல் எஸ்ஐ இவர்.. 47 வயதாகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர்.. கல்யாணமாகி 13 வயதில் ஒரு மகன், 14 வயதில் ஒரு மகள் உள்ளனர்..

நெற்றிப்பொட்டு
இங்கு 2 வருஷமாக வேலை பார்த்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று திடீரென இவர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார்.. நெற்றியில் குறி வைத்து இவர் சுட்டு கொண்டதில், அப்போதே, அங்கேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சத்தம் கேட்டுதான் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

ஓய்வறை
அங்கிருந்த ஊழியர்கள் அலறி துடித்தனர்.. உடனடியாக மாம்பலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களும் விரைந்து வந்தனர். இங்கு பணியில் ஈடுபடும் போலீஸார் தங்குவதற்காகவே இந்த ஆபீசுக்கு பின்பக்கம் ஒரு ரூம் உள்ளதாம்.. யார் டியூட்டியில் இருந்தாலும் இங்குதான் இந்த ரூமில்தான் தங்குவார்கள்.. அப்படித்தான் நேற்று சாயங்காலம் சேகரும் 5 மணி போல ரூமில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தார்.

தற்கொலை
போலீசார் விரைந்து வந்து சேகரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையை ஆரம்பித்தனர்.. சேகர் சுட்டு கொண்ட, அந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.. தற்கொலைக்கு முன்பு சேகர் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார்.. அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடிதம்
வீடு கட்ட 25 லட்சம் கடன் வாங்கினாராம், அதை திருப்பி தராமலும் இருந்துள்ளார்.. இனிமேலும் அந்த காசை தராமல் போய்விடுவோமோ என்று பயத்தில் சில நாட்களாகவே மன உளைச்சலிலும் இருந்து கொண்டுள்ளார்.. அதன்காரணமாகவே இந்த தற்கொலையை செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடக்கிறது. அந்த அலுவலக ஊழியர்களிடம் இதை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications