ஒரே கல்லில் பல மாங்காய்.. மொத்தமாக 2 மேட்டரையும் கையில் எடுத்த ஸ்டாலின்.. அரண்டு நிற்கும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிக முக்கியமான இரண்டு வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டால் மொத்தமாக பல தலைகள் உள்ளே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    MK Stalin உத்தரவு! | Pollachi, Kodanad Case-ஐ கையில் எடுக்கும் அதிகாரிகள் | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள், புகார்களை விசாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆட்சியில் செய்யப்பட ஒப்பந்தங்கள், முறைகேடுகள்,ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மிக தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் ஏற்கனவே முடிக்கப்படாமல் இருக்கும் இரண்டு வழக்குகளை முதல்வர் ஸ்டாலின் வேகமாக விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிகின்றன. அந்த இரண்டு வழக்கு என்னென்ன என்று பார்க்கலாம்..

    வழக்கு 1

    வழக்கு 1

    முதல் வழக்கு.. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. பொள்ளாச்சி வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வந்தாலும் இதில் முக்கியமான சில ஆதாரங்களை அரசு தரப்பு திரட்டி வருகிறதாம். இந்த வழக்கில் ஏற்கனவே சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கடந்த ஆட்சியில் இவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் திரட்டப்படாத காரணத்தால், இவர்கள் மீதான குண்டர் சட்டம் நீக்கப்பட்டது.

     விசாரணை

    விசாரணை

    அப்போதே முந்தைய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். இந்த வழக்கில் அரசு சரியான ஆதாரங்களை திரட்டவில்லை என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கில் முக்கியமான சில ஆதாரங்களை, வாக்குமூலங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்ற விசாரணையின் போது தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிபிஐக்கும் முக்கியமான ஆதாரங்களை அரசு தரப்பு வழங்கும் என்று கூறப்படுகிறது.

    அரசு தரப்பு

    அரசு தரப்பு

    பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்களை திரட்டுங்கள், வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பாக இதை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமான சில அதிமுக தலைகளை குறி வைத்து இந்த வழக்கு விசாரணை நகர்த்தப்பட்டு வருவதாக தகவல் வருகிறது. 3 அதிமுக தலைகளுக்கு எதிராக இந்த ஆதாரங்களை திரட்டும் முடிவில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

     பொள்ளாச்சி

    பொள்ளாச்சி

    கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கு எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு கொடநாடு கொலை வழக்கும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

    கைது

    கைது

    சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. சயான், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இதில் கனகராஜ் விபத்தில் பலியாகிவிட்ட நிலையில் சயான், மனோஜ் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளனர். இவர்களிடம் வலுவான வாக்குமூலம் ஒன்றை வாங்கும் முடிவில் அரசு தரப்பு இறங்கி உள்ளது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    முன்னாள் அரசில் இருந்த சில தலைகளுக்கு எதிராக இவர்களை வாக்குமூலம் கொடுக்க வைக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அதோடு இன்னும் சில முக்கிய புள்ளிகளும் இதில் அப்ரூவர் ஆக போவதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு தரப்பு துரிதப்படுத்தி உள்ளதாகவும், விரைவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

    திருப்பம்

    திருப்பம்

    இந்த இரண்டு வழக்கிலும் வரும் நாட்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். ஒரே கல்லில் பல மாங்காய் விழலாம். பலர் இதில் சிக்கலாம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக அதிமுக தலைகள் பலர் இதில் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என்று செய்திகள் வருகின்றன. அதிமுக தரப்பு தொடர் வெளியாகும் இது போன்ற தகவல்கள் கொஞ்சம் ஜெர்க்காகி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+