பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. தமிழக காங். செயல் தலைவருக்கு சிபிசிஐடி சம்மன்
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு, சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளியாக கருதப்படும், திருநாவுக்கரசு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இந்த நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு, தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. சிபிஐ இன்னும் இந்த வழக்கு விசாரணையை ஆரம்பிக்காத நிலையில், சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

திடுக்கிடும் திருப்பம்
திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், திருப்பம் தரும், தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரை, தான் சந்திக்க சென்றிருந்ததாகவும், பாலியல் துன்புறுத்தல் நடந்த தினத்தில் நான் அவருடன் தான் இருந்தேன் என்றும் விசாரணையில் தெரிவித்தாராம். தனக்கு மயூரா ஜெயக்குமார் நன்கு அறிமுகமானவர் என்று திருநாவுக்கரசு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணை
திருநாவுக்கரசு கூறுவது உண்மையா என்பது தொடர்பாக, மயூரா ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பங்கள்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம், புது திருப்பங்களுடன் பயணிக்க தொடங்கியுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, திமுக தலைவர், ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன்மீது களங்கம் ஏற்படுத்துவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்ததும், அதற்கு பதிலாக, சபரீசன் பதில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications