கலங்கடிக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம்.. கொதிக்கும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் நேஷனல் மீடியா!
பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய ஊடகங்கள் எந்த விதமான செய்திகளும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய ஊடகங்கள் எந்த விதமான செய்திகளும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இந்த சம்பவத்தை தேசிய மீடியாக்கள் ஒரு சிறிய செய்தியாக கூட வெளியிடவில்லை.
பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. அந்த கும்பல் பெண்களை ஏமாற்றி பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
இந்த பாலியல் வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

வெளியிடவில்லை
பொள்ளாச்சி விவகாரம் பெரிதாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து தேசிய மீடியாக்கள் இதுவரை எந்த செய்தியும் வெளியிடவில்லை. தமிழகமே இங்கு கொதித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தேசிய ஊடகங்கள் இதுகுறித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

என்ன முக்கியம்
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அதை குறித்த செய்திகளே தேசிய ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்து இருக்கிறது. வடஇந்திய மக்கள் தேர்தல் குறித்து நிறைய செய்திகளை படிக்கிறார்கள். அதனால் தேசிய ஊடகங்கள், தேர்தல் செய்திகளில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துகிறது.

தெரியவில்லை
இதனால் தற்போது இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்த எந்த விவரமும் வடஇந்தியர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. என்ன நடந்தது, தமிழகத்தில் ஏன் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறித்து வடஇந்தியர்களுக்கு எந்த விஷயமும் தெரியாது.

நிறைய பேர் இருக்கிறார்கள்
பொதுவாக தேசிய மீடியாக்களில் தமிழர்கள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்கள்தான் ஊடக துறையில் முக்கிய இடங்களில் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் இந்த பொள்ளாச்சி பிரச்சனையை தேசிய அளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications