Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவி சினிமா பாடலையா பாடச் சொன்னார்.. அவமானப்படுத்திட்டாங்க.. கொந்தளித்த பொன் ராதா கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ரவி சினிமா பாடலையா பாடச் சொன்னார்.. ஆளுநரை அவமானப்படுத்தும் வகையில் திமுக அரசு செயல்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தேசிய கீதம் இயக்கப்படுவதில் அவை மரபு பின்பற்றப்படவில்லை என்றும், தனக்கு கொடுக்கப்பட்ட உரையில் தார்மீக ரீதியாகவும், தகவல் ரீதியாகவும் உடன்பாடு இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலைப்பாடு எடுத்து உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. இதுபற்றி பிரபல ஊடகம் ஒன்று முன்னாள் மத்திய இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியது.

Pon Radhakrishnan alleged that Governor Ravi was insulted in the Tamil Nadu Assembly

அதற்கு பதில் அளித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஒரு விஷயத்தை வந்து திராவிட முன்னேற்ற கழகமும், இன்றைய திராவிட முன்னேற்ற கழக அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்... தமிழக சட்டசபை என்பது திராவிட முன்னேற் கழகத்தின் அறிவாலயம் இல்லை.. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மண்பை வெளிப்படுத்தக்கூடிய இடம் சட்டசபை.

அந்த சட்டசபையில் எவை எல்லாம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு கொண்டிருக்கிறதோ, அதை புறக்கணிக்க திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் , தன்னுடைய கட்சியினுடைய சிந்தனைகளை அங்கே கொண்டு சென்று செலுத்துவார்கள் என்று சொன்னால், அது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அத்தனை கோடி தமிழக மக்களுக்கும் இளைக்ககூடிய அவமானம் என்று நான் கருதுகிறேன்..

ஒரு ஆளுநரை இவர்கள் சென்று அழைத்து , கட்டாயம் வந்தாக வேண்டும் என்று முறைப்படி அழைத்து, அந்த அழைப்பை ஏற்று ஆளுநர் அவைக்கு வந்த பின்னர், அழைத்த விருந்தாளியை அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து இந்த அரசு செயல்படும் என்று சொன்னால், இவர்கள் ஆளுவதற்கு அருகதை அற்றவர்கள் என்பதை, இந்த அவையின் நடவடிக்கையின் மூலமாகவே பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார்கள் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது சொன்னார்.. வாக்களித்தவர்களுக்கும், வாக்காளிக்காதவர்களும், ஒத்த சிந்தனை உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கூட பொதுவான அரசாங்கமாக இந்த அரசாங்கம் அமையும் என்று சொன்னார். ஆனால் துரதிஷ்டவசமாக அதுபோன்ற நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடவில்லை என்றார்.

அப்போது ஊடகவியலாளர் குறுக்கிட்டு, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் முடிவடையும்போது தேசிய கீதம் இசைக்கப்படும் இதுதான் இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை பின்பற்றி வந்த மரபாக உள்ளது. இதற்கு முன்பும் ஆளுநர் பலமுறை உரையாற்ற வந்த போதும் இப்படித்தான் மரப்புகள் பின்பற்றப்படுகிறது. ஆளுநர் தான் மரபை மீறி இருக்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஏன் இப்போது மரப்பை மாற்ற ஆளுநர் கேட்கிறார் என்று கேட்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷணனிடம் ஊடகவியலாளர் கேட்டார்.

அதற்கு பொன் ராதாகிருஷணன் பதில் அளிக்கையில், "ஆளுநர் என்ன சினிமா பாட்டையா போட சொன்னார். தனக்கு பிடித்த பாடலை ஒளிபரப்ப சொன்னாரா? தேசிய கீதத்தை இசைப்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.. தமிழ்தாய் வாழ்த்து என்பது இதயத்தோடு ஒன்றிப்போன ஒன்று.. அது கட்டாயமாக படிக்கப்பட வேண்டும்.. இசைக்கப்பட வேண்டும். அனைவரும் அதற்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அதே நேரம் தேசிய கீதத்திற்கும் அந்த அளவிற்கும், இன்னும் சற்று அதிகமாக கூட மரியாதை கொடுக்கும் இடமாக இருக்க வேண்டும்.. இதைவிட்டுவிட்டு அந்த காலத்தில் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று விவாதம் நடத்தக்கூடிய மையமாக இருக்கக்கூடாது" என்றார்.

மேலும் பொன் ராதா, ஆளுநரை அழைக்கும் போதே இந்த மாதிரி நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்களா.. அது முறைப்படி நடந்துள்ளதாக என்று ஊடகவிலாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், அவை மரபுகள் காலம் காலமாக பின்பற்றப்படுவது படித்தான் பின்பற்றப்பட்டது என்று சொல்கிறார் என்றார். அதற்கு பொன் ராதா பேசுகையில், அவை தலைவர், திமுகவின் அவை தலைவர் போல் நடந்து கொள்ளக்கூடாது.. சட்டசபையின் அவை தலைவராக அவர் நடக்க வேண்டும்.. என்றார்.

அப்போது செய்தியாளர், ஆளுநரின் இன்னொரு குற்றச்சாட்டும் கூர்மையானதாக உள்ளது. எனக்கு தயாரித்து கொடுத்த உரையில், தார்மீக ரீதியாக உடன்பாடு இல்லை .. அதையும் கடந்து வாசித்தால் அரசியல் சாசனத்தை அது கேள்விக்குள்ளாகிடும் என்று கூறுகிறார். பொதுவாக ஆளுநர் என்பவர், அரசு தயாரித்த உரையை வாசிப்பது தானே மரபு என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில், மரபு என்பதை 100 சதவீதம் கடைபிடிப்பவர்கள் என்று சொன்னால், அது ஏறறுக்கொள்ளக்கூடியது. ஆனால் ஆளும் அரசு தங்களுடைய விருப்பதை புகுத்த, தங்களுடைய கொள்கைகளை புகுத்த தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லும் போது, அதை அப்படியே ஏற்க வேண்டுமா.. இவர்கள் சொல்கின்ற தவறுகளை அப்படியே ஆளுநர் உரைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும் என்றார்.

அப்போது செய்தியாளர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் உரையை புறக்கணிக்கிறார்களா.. ஜனாதிபதிக்கு மத்திய அரசு தயாரித்த உரையை ஜனாபதி புறக்கணிக்கிறாரா.. அங்கே எல்லாம் இல்லாத பாரபட்சம் பாஜக ஆளாதா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பொன் ராதா பதில் அளித்து பேசுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் புறக்கணிக்கும் அளவிற்கு உரையை தயாரித்து கொடுத்தார்களா என்பதை சொல்ல சொல்லுங்கள் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+