கிளாம்பாக்கம் வந்தாலும் கூட.. சென்னையில் குறையாத போக்குவரத்து நெரிசல்.. அணிவகுத்து நின்ற வாகனங்கள்
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் இன்று முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நிலையில் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்திருந்தாலும் கூட பல இடங்களில் வாகன நெரிசல் என்பது அதிகரித்து காணப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17 ம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பல ஐடி நிறுவனங்களுக்கு நாளைய தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும்.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். மக்கள் சிரமமின்றி சென்று வர வசதியாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வழக்கமாக 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம், சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, குரும்குளம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான மக்கள் கார்களில் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன. விழுப்புரம், திருச்சி உள்பட தென்மாவட்டங்களுக்கு இந்த சாலை வழியாக ஏராளமானவர்கள் சென்றதால் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
மேலும் எப்போதும் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் பெருங்குளத்தூரிலும் இன்று வாகனங்கள் ஊர்ந்து தான் சென்றன. பஸ்களை விட கார்களின் எண்ணிக்கை என்பது அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது இன்றும் அங்கு ஏற்பட்டது. சிங்கபெருமாள் கோவில் சாலையிலும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மெதுவாக சென்றன. மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இருப்பினும் கூட சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் என்பது வழக்கத்தை விட குறைந்து இருந்தது. பொதுவாக பண்டிகை சமயங்களில் கோயம்பேட்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயங்குவதால் அங்கு கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். கடும் இட நெருக்கடி ஏற்படும். ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் இன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் என்பது வழக்கத்தை விட குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications