கமகமன்னு பொங்கல், சுடச்சுட இட்லி.. அதிமுக, திமுக, பாஜக சர்ப்ரைஸ்.. மகிழ்ச்சியில் "ஏஜென்ட்கள்".. மாஸ்
சென்னை: நாளைய தினம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.. இதையொட்டி நாளைய தினம் மேற்கொள்ள போகும் ஒருசில அதிரடிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை ஓட்டுப்பதிவு தினத்தன்று, அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். அந்தவகையில், மக்களவைத் தோ்தல் பணியில் சுமாா் 5 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபட போகிறார்கள்..

தேர்தல் அதிகாரி: இவர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். அதாவது, வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடியை விட்டு காலை, மதிய உணவிற்காக எங்கும் வெளியில் செல்ல இயலாது என்பதால், உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கடந்த கால தேர்தல் அனுபவங்களில் பல்வேறு தருணங்களில் இவர்கள் உணவு உட்கொள்ளாமலே பணியாற்ற வேண்டிய கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 19ம் தேதி காலை, மதியம் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
முக்கிய கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில், ஓட்டுப்பதிவின்போது, திமுக, அதிமுக வேட்பாளர்கள் தரப்பிலிருந்து ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, சாபப்டு வழங்க போகிறார்களாம். அதிலும், காலை டிபன், மதியம் பிரியாணி, சிக்கன் வறுவல், மட்டன் போன்றவை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்போதுமே, ஓட்டுச்சாவடிக்குள் அதிகாரிகளுடன், போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில், பூத் ஏஜென்ட் மட்டுமே இருக்க அனுமதி உள்ளது.. காலையில் ஓட்டுப்பதிவு ஆரம்பித்துவிட்டால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றி, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பும் வரை அந்த பூத் ஏஜென்ட்கள் ஓட்டுச்சாவடியை விட்டு வெளியேறக்கூடாது. அதனால்தான், அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமையல் கலைஞர்கள்: சைவ, அசைவம் என தனித்தனியாக உணவு தரப்படுகிறது.. இதற்காகவே, சைவ உணவுக்கு தனியாகவும், பிரியாணிக்கு தனியாகவும் சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. அந்தவகையில், காலை டிபனாக இட்லி, பொங்கல், பூரி, வடை, கேசரி பார்சல் செய்து, கட்சியினர் வாயிலாகவே காலை, 8 மணிக்குள் வழங்கப்பட உள்ளதாம்..
அதேபோல மதியம், தலா 75 கிராம் எடையில் 4 பீஸ் உள்ள மட்டன் பிரியாணி, 5 பீஸ் உள்ள சிக்கன் வறுவல் போன்றவை வழங்கப்பட உள்ளது... சாயங்காலம் சுண்டல், ஒரு தோசை, 2 சப்பாத்தி குருமா, சாம்பார் வழங்கப்பட உள்ளதாம்..
பூத் ஏஜென்ட்கள்: அதிமுக, திமுகவை போலவே, பாஜக வேட்பாளர்கள், முகவர்களுக்கும் உணவு வழங்க, ஹோட்டல்களில் ஆர்டர் தரப்பட்டுள்ளது.. மொத்தத்தில் வாக்குப்பதிவு முடியும்வரை, அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்களை ஸ்பெஷலாக கவனித்து கொள்வதாக தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications