பொங்கல் பரிசு தொகையில்.. சேர்க்கப்படும் முக்கிய முடிவு பொருள்.. தமிழக அரசு இன்று முக்கிய முடிவு? அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகையில் வெல்லம் தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசு தொகையில் வெல்லம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசு பதில் மனு தரும் அல்லது இன்று இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் சார்பாக இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

pongal 2025 pongal gift cm stalin 2025

ஏற்கனவே பொங்கலுக்கு பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறதாம். நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கு தேவை. அதோடு இல்லாமல்.. வங்கி கணக்கில் அவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும்.

இதன் காரணமாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான ஆலோசனைகளை.. நல்லவை தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

யாருக்கு வழங்கப்படும்: அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று எல்லோருக்கும் இந்த பணம் வழங்கப்படும்.

அடுத்த வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்பாக இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ரேஷன் கார்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படும். அதில் நேரம், தேதி இருக்கும். அந்த நாளில் மட்டும் சென்று பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

சிலருக்கு 2000 ரூபாய்: இதில் சிலருக்கு மட்டும் அந்த மாதம் ரூ.2000 கிடைக்கும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது,மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர்களுக்கு மட்டும் அரசு சார்பாக ரூ.2000 கிடைக்கும்.

வழக்கு பின்னணி: பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். கடந்த வருடம் வெல்லம் வழங்கப்படவில்லை. வெல்லம் உருகிவிடுகிறது.. அதேபோல் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்படுகின்றன என்பதால் சர்க்கரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வழக்கு காரணமாக இந்த முறை வெல்லம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விரைவில் டோக்கன்: வங்கி கணக்கில் இல்லாமல் நேரடியாக வழங்கும் பட்சத்தில்.. பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து.. பெரும்பாலும் 29ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இந்த வருடம் கரும்பு வழங்கப்படும், ஆனால் வெல்லம் இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+