2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பெரியகருப்பன் அப்டேட்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுவரை 97% குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று பயன் அடைந்துள்ளனர் என கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை சீராக நடத்துவதற்காக ரேஷன் கடைகளில் டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி அவர்கள் தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்கப் பணத்தை பெற்றுக்கொண்டனர். இதனால் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் தற்போது வரை 97% சதவீத ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத்தை பெற்று முடித்து விட்டனர். மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் பெறாத நிலையில், அவர்களுக்காக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனை எடுத்துச் சென்று தங்கள் ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதல்வர் அவர்களின் சீர்மிகு திட்டங்கள் மக்களை சென்றடையவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், பேணிக் காத்திடவும், அயராது சிந்தித்தும் செயல்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்தும், உணர்ந்தும் துறைகள் தோறும் பல திட்டங்கள் அளித்து, அதில் சாதனைகளையும் புரிந்து வருகிறார்.
மக்களுக்கான வாழ்வாதாரத்தை சேவைகளையும், வாழ்வின் பொருளாதாரத்தையும், தன்னம்பிக்கையும் மேம்படுத்திடவும், கூட்டுறவுத்துறை ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. வளர்த்திடவும், கூட்டுறவுத்துறையின் பல முத்தான திட்டங்கள் புதியதாக துவக்கியும், ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்தியும், சிறப்பாகவும் செம்மையாகயும் செயல்படுத்தி வருவதை, கூட்டுறவுத்துறையின் அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக கவனமுடன் தொய்வின்றி திறம்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்" எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுவரை 97% குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று பயன் அடைந்துள்ளனர் என கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications