லிஃப்ட் கண்ணாடியை பார்த்து தலைமுடியை சரி செய்துகொண்ட பொன்முடி! அமலாக்கத்துறை அலுவலகத்தில் ருசிகரம்!
சென்னை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த லிஃப்டில் ஏறிய போது அதிலிருந்து கண்ணாடியில் பார்த்து தனது தலைமுடியை சரிசெய்து கொண்டார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு ஆஜராகும் போது தலைமுடி கலைந்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் பொன்முடி கவனமுடன் இருந்தது இதன் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்ல விசாரணை என்றவுடன் தாம் ஒன்றும் பம்மி பயந்துகொள்ளவில்லை என்பதையும் கேசுவலாக தான் இருக்கிறேன் என்பதையும் ஊடகங்களுக்கு உணர்த்தும் வகையில் அவர் தலைமுடியை டச் அப் செய்து கொண்டார்.

சைதாப்பேட்டை இல்லத்திலிருந்து ஒரே காரில் பொன்முடியும், அவரது மகன் கவுதம சிகாமணியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றனர். அங்கே அப்பாவை ஒரு அறையிலும், மகனை ஒரு அறையிலும் அமர வைத்து விசாரணை நடத்தினர். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அவர்கள் இருவரையும் ஒரே அறையில் அமர வைத்து கேள்விக்கணைகளை வீசி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் பொன்முடியுடன் வந்த வழக்கறிஞர் ஒருவரையும், மருத்துவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. நேற்று நள்ளிரவு வரை 7 மணி நேரம் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றதன் அடிப்படையில் இன்று அவருக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது அமைச்சர் பொன்முடி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே கையில் சில ஆவணங்களுடன் இன்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார் கவுதம சிகாமணி எம்.பி. விழுப்புரத்திலிருந்து வந்துள்ள அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்கள் அவரது சைதாப்பேட்டை இல்லத்தின் முன் குவிந்துள்ளனர். சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதால் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications