உலகத்திற்கே பெரிய ஆபத்து.. எதிர்பார்க்காத இடத்திலிருந்து வரும் பிரச்சனை.. எலான் மஸ்க் பரபர வார்னிங்
சென்னை: உலக நாடுகளுக்கு எதிர்பார்க்காத முக்கியமான ஒரு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க தற்போது ஏலியன்கள், யுஎப்ஓக்கள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்காவின் நாடாளுமன்ற விசாரணையில் யுஎப்ஓ இருப்பதாக வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டன. இன்னொரு பக்கம் ஏலியன் வருகை குறித்த அச்சங்களும் கூட எழுந்து உள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காலநிலை மாற்றம். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
இது போக கொரோனா போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கொரோனாவின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் துவங்கியது. இப்படி பல விஷயங்கள் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் உலகத்திற்கு வேறு ஒரு விதமான ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க தற்போது விண்வெளி பயணம் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. விண்வெளி பயணம் என்பது ஆராய்ச்சிக்காக என்பது தாண்டி தற்போது சுற்றுலா, செவ்வாய் கிரக குடியேற்றம் என்ற அளவிற்கு நீண்டு உள்ளது. இதில் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஆராய்ச்சி செய்து வரும் நபர்தான் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் இவர்தான்.
ஆபத்து: இந்த நிலையில் உலக நாடுகளுக்கு எதிர்பார்க்காத முக்கியமான ஒரு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள்தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி உள்ளார்.

• ஜப்பான் 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகையில் மிகப்பெரிய மொத்த வீழ்ச்சியைக் கொண்டுள்ளது.
• பிறப்பு விகிதம் தேக்கமடைவதால் அமெரிக்கா நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
• சீனாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை சரிந்து வருகிறது.
• சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
• இங்கிலாந்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
• இத்தாலியின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தது.
• உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கான அவல சாதனையை தென் கொரியா மீண்டும் மேற்கொண்டு உள்ளது.
மக்கள் தொகை சரிவு காரணமாக ஏற்படும் இந்த பாதிப்புதான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications