கொடியில் யானை சின்னம்.. தவெக விஜய் போல பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சிக்கும் சிக்கல் வருமா?
சென்னை: 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் ஆம்ட்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. இந்தக் கட்சியின் கொடியில் யானை இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு சிக்கல் ஏற்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடி கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.
புதிய கட்சி
ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள் இன்று ஜூலை 5 ஆம் தேதி, 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற தனிக் கட்சியை தொடங்கியதாக அறிவித்துள்ளார் பொற்கொடி. இந்த கட்சியின் கொடியையும் பொற்கொடி இன்று அறிமுகப்படுத்தினார். நீல நிற கொடியில் தும்பிக்கையில் பேனாவுடன் யானை இருப்பது போல தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானை சின்னம்
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம், இந்த புதிய கட்சியின் கொடியிலும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள புதிய கட்சியின் கொடியிலும் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால், இதனால் சிக்கல் வருமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருந்ததற்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன், பகுஜன் சமாஜ் கொடியில் ஏற்கெனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தவெகவுக்கு எதிரான வழக்கு
பின்னர் இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், "எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார்.
அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் சொன்ன பதில்
அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், "கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவதில்லை. தேர்தலின் போது ஒரு கட்சியின் வாக்கு சின்னத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச்சட்டம் 1950ன் விதிக்கு உட்பட்டு, கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை வடிவமைப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு. நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது" என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது.
இதையடுத்து, தவெகவின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. யானை சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த விதத் தொடா்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளா்ச்சிக்கான எதிா்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. வாக்காளா்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை" என தவெக தரப்பு வாதம் வைத்தது.
இதையடுத்து தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் முன்வைக்க அனுமதிக்கக் கோரியும், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்க தவெக தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க











Click it and Unblock the Notifications