மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.. அஞ்சல் துறை போட்ட அதிரடி கட்டுப்பாடுகள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை: அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலிருந்து (SCSS) உங்களது முதலீட்டை முன்கூட்டியே எடுப்பதற்கு (Premature Withdrawal) அரசாங்கம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ராஜேஷ் வெளியிட்ட பதிவினை பாருங்கள்.
பொருளாதார நிபுணர் ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ""நவம்பர் 7, 2023 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் துறை அறிவிப்பின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலிருந்து (SCSS) உங்களது முதலீட்டை முன்கூட்டியே எடுப்பதற்கு (Premature Withdrawal) அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரங்கள் கீழே:

உங்களது முதலீட்டை ஒரு வருடத்திற்கு முன்னமே எடுக்க விரும்பினால், பெனால்டி தொகையாக, உங்களது முதலீட்டில் 1% வசூலிக்கப்படும். அதாவது, நீங்கள் ₹1,00,000 முதலீடு செய்து, ஒரு வருடம் முடியும் முன்னமே உங்களது முதலீட்டை Premature Withdrawal செய்ய விரும்பினால், அதற்கு கட்டணமாக ₹1,000 பிடித்துக்கொண்டு, உங்களுக்கு ₹99,000 திரும்ப வழங்கப்படும்.
ஒன்று/இரண்டு/மூன்று வருடங்களுக்கான வைப்புதொகையை, டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஆறு மாதம் முடிந்த பிறகு மற்றும் ஒரு வருட முடிவிற்குள் நீங்கள் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, நார்மல் போஸ்டர் ஆபிஸ் சேவிங் அக்கவுண்ட் வட்டியாக மாற்றப்படும்.

ஒன்று/இரண்டு/மூன்று வருடங்களுக்கான வைப்புதொகையை, டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னர் நீங்கள் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, முதலீட்டு வட்டியிலிருந்து 2% கழித்துக்கொள்ளப்பட்டு, எவ்வளவு மாதங்கள் முதலீடு செய்தீர்களோ, அந்த மாதங்களுக்கு மட்டும் வட்டி கணக்கிட்டு உங்களுக்கு தரப்படும்.
ஐந்து வருட முதலீட்டுகளில், நீங்கள் நான்கு வருடம் முடிந்த பின்னர் premature withdrawal செய்தால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, நார்மல் போஸ்டர் ஆபிஸ் சேவிங் அக்கவுண்ட் Account வட்டியாக மாற்றப்படும். எந்தவொரு முதலீட்டையும், ஆறு மாதம் முடியும் முன்னர் உங்களால் premature withdrawal செய்ய முடியாது." இவ்வாறு கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications