தமிழ்நாடு லோக்சபா தேர்தல்.. தபால் வாக்குப் பதிவு தொடங்கியது! யாரெல்லாம் வாக்களிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முறை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

Postal votes for elderly and physically challenged begins in for tamil nadu lok sabha election

தமிழ்நாட்டில் இந்த முறை பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் மிகத் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் வீடுகளுக்கே சென்று வாக்குகளைப் பெற்று வருகிறார்கள். 85 வயதைக் கடந்தவர்கள், வாக்குச்சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இந்த தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே இதற்குத் தேவையான விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அதில் விருப்பம் தெரிவித்தவர்களிடம் வாக்குகளைச் சேகரிக்கும் பணி ஆரம்பித்துள்ளது. இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 3 நாட்களுக்குக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகள் சேகரிக்கப்பட உள்ளது.

தவிர்க்கவே முடியாத காரணங்களால் இந்த மூன்று நாட்கள் தபால் வாக்குகளைச் செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+