சென்னை மக்களே கவனம்! இந்த முக்கிய ஏரியாக்களில் இன்று 5 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை: தலைநகர் சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று ஜூலை 3ம் தேதி திங்கள்கிழமை நகரில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூலை 3ம் தேதி திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் விரைவாக முடிவடைந்தால் மதியம் 2 மணி முன்னதாகவே மின் விநியோகம் சீராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதியில் மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மப்பேடு, செயலக காலனி, அன்னை தெரசா தெரு, திருவாஞ்சேரி, ரூபி குடியிருப்பு, ஸ்ரீ சாய் நகர், பாய் கார்டன் ராஜகீழ்பாக்கம் சிட்லபாக்கம் மெயின் ரோடு, மேத்தா நகர், பாபு தெரு, ஸ்ரீராம் நகர், பாலாஜி அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை முதல் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் லஸ் சர்ச் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3வது தெரு, வாரன் சாலை, பிஎன்கே தோட்டம், கேனல் பேங்க் சாலை, தேசிகா சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ராயப்பேட்டை சாலையின் ஒரு பகுதி, கச்சேரி சாலை, ரங்கநாதபுரம் தெரு, சோனாசலம் தெரு, நாச்சியப்பா தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சுற்றியுள்ள பகுதிகளில் டிஃபென்ஸ் காலனி 1 முதல் 16வது தெரு, சுந்தர் நகர் நந்தம்பாக்கம் மங்காளியம்மன் கோயில் தெரு, கலைஞர் நகர், கணபதி காலனி, ராஜ்பவன் மவுண்ட் ரோட்டின் ஒரு பகுதி, சர்தார் பட்டேல் சாலை, முகலிவாக்கம் கமலா நகர், சபரி நகர் எக்ஸ்டென்ஷன், ஆலந்தூர் தெரு, வேதகிரி சாலை, பருத்திவாக்கம் தெரு, வேளச்சேரி சாலை, எம்கேஎன் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ் மடிப்பாக்கம் லட்சுமி நகர், குபேரன் நகர் 12வது தெரு ஆகிய பகுதிகளில் பராமரிப்பு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
மூவரசன்பேட்டை ராகவா நகர் பகுதி, அண்ணா தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, புழுதிவாக்கம் பாலையா கார்டன் பகுதி, ராஜா தெரு, முருகப்பன் தெரு வானுவம்பேட்டை சரஸ்வதி நகர், ஏஜிஎஸ் காலனி டிஜி நகர் நங்கநல்லூர், வீரராகவன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
அதேபோல கே.கே.நகர் பகுதிகளில் வளசரவாக்கம் ஜானகி நகர், பிரகாசம் சாலை பகுதி அழகிரி நகர் பக்தவத்சலம் காலனி சூளைமேடு கில் நகர், திருவள்ளுவர்புரம், தசரதபுரம், அண்ணாமலை காலனி, கே.கே.நகர் தெற்கு, அசோக் பில்லர் பகுதி, ஸ்ரீராமராமம் தெருவைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு மணிக்கு மின்சாரம் கட் ஆக உள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு மதியம் 2 மணிக்கு மின்சாரம் மீண்டும் வரும். ஒரு வேளை முன்கூட்டியே பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால், அதற்கேற்ப மின்சார சப்ளை வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications