மின்வாரியம் தந்த அலர்ட்.. சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. ஏரியா வாரியாக லிஸ்ட் இதோ
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மாதம் ஒருமுறை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று சில இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெறும் நிலையில் மின்தடை ஏற்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
சென்னை-யில் 07.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இராஜகீழ்பாக்கம், மடிப்பாக்கம், மாத்தூர், கொரட்டூர் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ராஜகீழ்பாக்கம் - மடிப்பாக்கம்: ராஜகீழ்பாக்கம் ஏரியாவை பொறுத்தவரை டெல்லஸ் அவென்யூ - கட்டம் 1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நேஸ் அவென்யூ ஆகிய இடங்களிலும், மடிப்பாக்கத்தை எடுத்து கொண்டால் சதாசிவம் நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் வடக்கு, ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ (பகுதி), பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், உயரழுத்தம் மின் விநியோகம் (HT Service), எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிசி நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லூரிசாலை, மேற்கு தோட்டம் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சப்ளை இருக்காது.
அதேபோல் காத்தாகுழி, திடீர் நகர் பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழுவதும், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் என்பது இருக்காது.
கொரட்டூர்: பிரிட்டானியா எம்டிஎச் சாலை, ராஜா தெரு, கோபால் நாயக்கர் தெரு கம்பர் தெரு, திருவள்ளூர் தெரு, சுந்தரர் தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications