அதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் அட்வைஸ்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், கொரோனா தடுப்பு குழு மருத்துவருமான பிரதீப் கவுர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் 10,986 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

எத்தனை பேர்
தமிழகத்தில் 10,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 11 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவர்
சென்னையில் மட்டும் 3,711 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 79 ஆயிரம் பேருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிக வேகமாக பரவி வருவதாக மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
|
சமாளிப்பு
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதை குறைக்கத் தவறினால் சுகாதார அமைப்புகளால் நிலைமையை சமாளிப்பது என்பது சாத்தியமில்லை.

மக்கள்
நாம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து அத்தியாவசியமற்ற அனைத்து செயல்களையும் தவிர்த்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். மக்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications