தமிழகம் முழுவதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கின
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
சென்னை: தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. மாநிலம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.
Recommended Video

கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 28ஆம் தேதி வரையும் ஏப்ரல் 28 முதல் மே 2ஆம் தேதி வரை இரு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்களுக்கு செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு முடிவுகள் 10 ஆம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதியும்,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications