என்ட் கார்டு இல்லாத வடகிழக்கு பருவமழை.. மாச கடைசில மீண்டும் தொடங்கி பிப். வரை நீளும் மழை.. வெதர்மேன்
சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழையில் இரு புயல்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று நிவர் புயல், இன்னொரு புயலாக மாறி கரையை கடப்பதற்குள் வலுவிழந்தது புரேவி.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த பருவமழையில் இரு புயல்கள் ஏற்பட்டன. அதில் ஒன்று நிவர் புயல், இன்னொரு புயலாக மாறி கரையை கடப்பதற்குள் வலுவிழந்த புரேவி.
இதில் நிவர் நல்ல மழையை கொடுத்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. புரேவி புயலும் தமிழகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியான மழையை கொடுத்தது என்றே கூறலாம்.

14 மணி நேரம்
கடந்த 5 ஆம் தேதி சென்னையில் இரவு முதல் விடாமல் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. புயல் உருவாகினாலோ காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தாலோ எப்படி பெய்யுமோ அப்படியிருந்தது இந்த மழை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடையும் என சொல்லப்பட்டது.

ட்விட்டர் பக்கம்
ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் பிப்ரவரி மாதம் வரை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் North East Monsoon Never Ending Monsoon ஆக மாறிவிட்டது. அதாவது வடகிழக்கு பருவமழை முடிவே இல்லாமல் இருக்கிறது.

வறண்ட காற்று
பொதுவாக குளிர் காலத்தில் மழை பெய்யாது. ஆனால் தற்போது குளிர் காலத்தில் மழையும் பெய்கிறது. இதனால் தமிழகத்திற்கு இந்த முறை குளிர் காலம் இல்லாமலேயே போய்விட்டது. ஜனவரி 17-ஆம் தேதிக்கு பிறகு வறண்ட காற்றால் மழைப் பொழிவு நின்றுவிடும்.

டெல்டா மாவட்டம்
ஆனால் மீண்டும் ஜனவரி மாத கடைசியில் தொடங்கும். இது பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மாதம் நாம் பார்ப்பது எல்லாம் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மி.மீ. வரை கடலூரில் மழை பெய்துள்ளது. அது போல் டெல்டா மாவட்டங்களிலும் 100 முதல் 200 மி.மீ. வரை பெய்துள்ளது.

கருணை காட்டாத மழை
இத்தனைக்கும் புயல் சின்னம் ஏதும் உருவாகாமலேயே அதிகமான மழை பெய்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கருணையே இல்லாமல் மழை பெய்துவிட்டது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications