மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக பிரசாத் லவானியா நியமனம்.. யார் இவர்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக பிரசாத் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்க்டராமன் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக பிரசாத் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகள் இன்னும் முறையாக தொடங்கி நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கி, 2028-ம் ஆண்டில்தான் முடிவடையும் என்று ஜப்பான் நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக இருந்த நாகராஜன் வெங்க்டராமன் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் பதவி காலியானது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாத் லாவனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியாக பிரசாந்த் லவானியா பணியாற்றி வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications