Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜக"வை கதற விட்டுட்டாரோ பிகே.. "இரவல் மூளை"தான்.. அதிமுகவையும், ஆடிப் போக வைத்து.. சக்ஸஸ் போல்கள்!

137 இடங்களை பிடித்து மீண்டும் அதிமுகவே ஆட்சி பிடிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்குவங்கத்தில் திரிணாமுலுக்கும் தேர்தல் வியூகம் அமைத்து தந்த பிரசாந்த் கிஷோர், எக்ஸிட் போல் வெளிவரும் இந்த தருணத்தில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறார்.

"தமிழகம் இழந்த புகழை மீட்கவும், நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க , ஒத்தகருத்துடைய பலதமிழக இளைஞர்கள் ஐபேக் அமைப்பின் கீழ் நம்முடன் 2021-ம் தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கடந்த வருடம் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

ஸ்டாலின் சொல்லித்தான் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு பணியாற்ற போகிறார் என்பதே தெரியவந்தது. சீனியர்கள் கொந்தளித்தனர்.. பல மூத்த நிர்வாகிகள் வாரிசுகளை களத்தில் இறக்க முடியாமல் தவித்தனர்.. இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட வேட்பாளர்கள் லிஸ்ட்டை பார்த்து பலர் புழுங்கி தவித்தனர்.. ஐபேக்கின் தலையீடு இப்படி அடாவடியாக இருக்கிறதே என்ற பொருமல்களும் எழவே செய்தன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

"அண்ணாவின் பேச்சினாலும், கருணாநிதியின் கடிதத்தினாலும் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு கார்ப்பரேட் கலாச்சாரம் தேவையா? திமுக காவி நிறமாகிறதா?" என்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.. ஆனால், இதில் ஒன்றைகூட இந்த தேர்தல் நடந்து முடியும் வரை, ஸ்டாலின் காதில் வாங்கவே இல்லை என்பதுதான் ஹைலைட்டே.

 கூட்டணி

கூட்டணி

இந்த ஐபேக் நிறுவனத்தின் பணியே வித்தியாசமானது.. தொகுதி வாரியாக மட்டுமல்லாமல் வார்டு வாரியாக இறங்கி வேலை பார்ப்பவர்கள்.. எந்த கட்சிக்கு வேலை பார்க்க வந்தோமோ அவர்களுக்காக மட்டுமில்லாமல், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும் சேர்த்து ஸ்கெட்ச் போடுபவர்கள்.. அதனால்தான், அவர்களால் திமுக 180+ இடங்களை வெற்றி பெறும் என்று ஆரம்பம் முதலே உறுதியாக சொல்ல முடிந்தது.

 கணிப்புகள்

கணிப்புகள்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் ஐபேக் சொன்னதையே சொல்லி இருந்தன.. நேற்றைய தினம் முதல் வெளிவரும் எக்ஸிட் போல் முடிவுகளும் அதையேதான் சொல்லி வருகின்றன.. கொஞ்சம்கூட கணிப்புகள் மாறவில்லை.. திமுக 190 இடங்களுக்கு மேல் வெல்லக்கூடும் என்றும், அதிமுக 90ஐ தாண்டாது என்றும்தான் அனைத்து எக்ஸிட் போல்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது என்றால், அதற்கு ஐபேக் போட்ட விதை தான் காரணம்.

 நமது அம்மா

நமது அம்மா

இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூர வேண்டி உள்ளது.. ஐபேக் டீம் திமுகவுக்கு வேலை செய்ய வந்தபோது, "நமது அம்மா" நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.. அதில், "திமுகவின் தலைமைக்கு அறிவு முலாம் பூச பீகாரிலிருந்து இரவல் மூளையை இறக்குமதி செய்திருக்கும் ஐபேக் நிறுவனம்" என்று போட்டு தாக்கியது. ஆனால், இதில் விசேஷம் என்னவென்றால், இதே இறக்குமதி மூளைக்காகத்தான் அதிமுகவும் அப்போது 6 மாதம் காத்திருந்தது... அதிலும் எம்பி தேர்தல் முடிந்தபிறகும் பிகேவுக்கு கொக்கி போட்டபடி இருந்தது என்பது வேறு விஷயம்.

பாஜக

பாஜக

இன்று ஒப்பந்தம் செய்த கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.. ஆரம்பத்தில், இவர் பாஜகவில் இருந்தவர்.. பிறகு அங்கிருந்து வெளியேறியதும், "பாஜகவை வீழ்த்துவதுதான் தன்னுடைய முதல் குறிக்கோள்" என்று ஓபனாகவே போட்டு தாக்கினார்.. அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ஐபேக் என்றாலும், தான் சொன்ன சொல்லில் இப்போது வரை பிகே உறுதியாகவும் திறம்படவும் காய் நகர்த்தி வந்துள்ளார் என்பதே நேற்றைய தினம் நமக்கு எக்ஸிட் போல்கள் காட்டும் உண்மை. இதற்கு சாட்சி நிதிஷ்குமார் வெற்றி.. ஜெகன் மோகன் வெற்றி.. இதை பார்த்துதான் மம்தாவும் பிகேவுடன் ஒப்பந்தம் போட்டார்.

பேட்டி

பேட்டி

சமீபத்தில் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் முடிந்தபோது பிகே ஒரு பேட்டி தந்திருந்தார்.. "மேற்குவங்கத்தில் பாஜக வலிமைமிகு அரசியல் சக்தி, அதனால், அதன் வீச்சை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது" என்றார்.. பிகே இப்படி சொல்லியதும் அனைத்து கட்சிகளுக்கும் தூக்கி வாரிப்போட்டது. சோஷியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மம்தா

மம்தா

"அப்படின்னா, பாஜகவின் வெற்றியை பிகே-வே வாய்விட்டு சொல்லிவிட்டாரே .. இன்னமும் இவர் மோடி ஆதரவாளர்தானா? காங்கிரஸை இப்படி கவிழ்த்துவிட்டாரே.." என்று தாறுமாறாக கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், நேற்றைய தினம் மேற்கு வங்கத்தின் எக்ஸிட் போல்களை பார்க்கும்போதுதான் புரிகிறது, வலிமையாக இருப்பதற்கும், வெற்றி பெறுவதற்கும் இடையேயான வித்தியாசம் மலையளவு ஆகும்.. இந்த மலையைதான் அந்த பிகே என்ற மலை அசைத்து பார்த்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது..!

மலை

மலை

மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளே தேவை என்ற நிலையில், திரினாமுல் கட்சியோ, 162 கைப்பற்றக்கூடும் என்று எக்ஸிட் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஸ்டாலினுக்கும் சரி, மம்தாவுக்கும் சரி, பிரசாந்த் கிஷோர் உச்சத்தின் விசுவாசியாகவே மிளிர்ந்துள்ளார்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+