மறைந்த க அன்பழகனின் உடலுக்கு திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அஞ்சலி
சென்னை: மறைந்த பேராசிரியர் க அன்பழகனின் உடலுக்கு திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் பேராசிரியர் க அன்பழகன். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, ஆ ராசா, டிகேஎஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு ஸ்டாலின் மகள் செந்தாமரையும், மருமகன் சபரீசனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அது போல் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அஞ்சலி செலுத்தினார்.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications