சீமான் விவகாரம்.. கோரிக்கை நிறைவேறியிருக்கே.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரஷாந்த் கிஷோர்
வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
தமிழகத்தில் வேலை செய்து வரும் பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.

வன்முறை தூண்டப்படுகிறது
பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவும் தமிழகம் விரைந்தது. தமிழக அரசு உடனடியாக வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கம் அளித்தது. இதனிடையே, பீகார் மநிலத்தை சேர்ந்தவரும் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், தனது ட்விட் பதிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். 'தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது" என்று குற்றம் சாட்டிய பிரசந்த் கிஷோர் இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், "போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களை விடக்கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்று நேரடியாக சீமானை பார்த்து கை காட்டியிருந்தார்.

சீமான் மீது புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தின் போது, சீமான் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பேசிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். அதில், கடந்த மாதம் 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தெரியவந்தது.

பிரசாந்த் கிஷோர் வரவேற்பு
இதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்கில் இந்த 3 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள பிரஷாந்த் கிஷோர், இது தொடர்பான செய்தியை தனது ட்விட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரசாந்த் கிஷோர், விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

பாதுகாப்புடன் உள்ளனர்
தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரவிய உடனேயே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்தது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புபவர்கள் தேச துரோகிகள் என்று விமர்சித்து இருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்த பீகார் அரசுக் குழுவும் "தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்" என்று கூறியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications