விஜய்கிட்ட நான் பேசல.. ஆனா அவர் கூப்பிட்டா வருவேன்.. தமிழக வெற்றிக் கழகத்திற்காக களமிறங்கும் பிகே!
சென்னை: நடிகர் விஜய் அழைத்தால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக பணி செய்ய தயார் என்று அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டது. திமுகவிற்கான தேர்தல் பணிகளை பிரஷாந்த் கிஷோரின் குழுதான் கவனித்தது.

பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம் என்று பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் முக்கிய காரணமாக இருந்தார். இவரை திமுகவும் இந்த தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்தது.
கமல் அணுகினார்: முன்னதாக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக செய்திகள் வந்தன. மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் பணிகளை வகுக்க பிகேவை கமல்ஹாசன் அணுகினார். ஆனால் இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால் திமுகவுடன் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியாகின.
சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு பிகே வேலை பார்க்கவில்லை என்றாலும் கட்சி உருவாக்கத்தின் போது.. அதன் அறிமுக பணிகளுக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது பிகேதான்.
விஜய் பிகே: இந்த நிலையில்தான் நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜய்யின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது.
மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர்.
இதில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வென்றனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
அதிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77 பதவிகளை பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்று உள்ளனர். நாம் தமிழர் கட்சி எந்த விதமான மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் நாம் தமிழர் எந்த இடத்திலும் வெல்லவில்லை. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டது.
விஜய் அரசியல்: இந்த நிலையில்தான் விஜய் அரசியலுக்கு வருவதற்காக அதிரடி திட்டங்களை வகுத்து தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி உள்ளார். சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார்
இப்போது கட்சி தொடங்கி உள்ள நிலையில் இனி அடிக்கடி "தோழர்களை" விஜய் சந்திப்பார், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டியை அமைப்பது, லோக்சபா தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சீக்ரெட் மீட்டிங் விரைவில் இவர்களுக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான்.. விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். அவருக்கான ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால் முழு நேரமாக அவருடன் வேலை பார்க்க மாட்டேன் என்று பிகே தெரிவித்துள்ளார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications