ரஜினி சாவோடு சடுகுடு ஆடுவார்.. எமன லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார்.. பிரவீன் காந்த் ரைமிங் வசனம்!
சென்னை: ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார், சாவோடு சடுகுடு ஆடுவார் என இயக்குநர் பிரவீண் காந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம் என ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தவர் அமிதாப் பச்சன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தவுடன், அவரது நெருங்கிய நண்பர்களான சிரஞ்சீவியும், மோகன்பாபுவும் ரஜினியை தொடர்பு கொண்டார்கள்.
அப்போது அரசியலுக்கு வந்தால் நிம்மதி போய்விடும். நிறைய அழுத்தங்கள் இருக்கும். உடல்நலமும் பாதிக்கப்படும். மேலும் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சேர்த்து வைத்த மரியாதை இருக்கவே இருக்காது என அறிவுறுத்தியுள்ளார்கள்.

ரஜினியிடம் தைரியம்
இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இவர்கள் ரஜினியிடம் தைரியமாக தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். ஆனால் ரஜினியோ ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் எப்படியாவது வர வேண்டும் என முடிவில்தான் இருந்தார். ஆனால் சந்தர்ப்பம் சூழலென ஒன்று இருக்கிறதே!

உடல்நலம் பாதிப்பு
ஹைதராபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆனவுடன் தனது முடிவை ரஜினி மாற்றிக் கொண்டார். இதையடுத்து அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார். ஆனால் ரஜினி ரசிகர்களோ அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என அவரை அழைத்து வருகிறார்கள்.

ஒருவர்தான்
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி அறவழி போராட்டத்தை நடத்தினர். அப்போது வா தலைவா வா என கோஷமிட்டனர். ரஜினிகாந்த் தனிக்கட்சியை தொடங்கி உலகையே அச்சுறுத்தணும், அது அவர் ஒருவரால்தான் முடியும் என ரசிகர்கள் தெரிவித்தனர். இதை அங்கிருந்த மற்ற ரசிகர்களும் ஆமோதித்தனர்.

சாவோடு சடுகுடு
இதுகுறித்து இயக்குநர் பிரவீன் காந்த் கூறுகையில் ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார். சாவோடு சடுகுடு ஆடுவார். எமன லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார் என டி ராஜேந்தர் பாணியில் அடுக்கு மொழியில் பேசினார். இதனால் இவரது பேச்சை நெட்டிசன்கள் டிரோல் செய்தனர். அவரது உடல்நலனை மதிக்காமல் ஏன் இப்படி அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள் என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications